டெல்லி நகருக்குள் பெருக்கெடுத்து ஓடும் யமுனை- வெளிமாநில பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளே நுழைய தடை!
டெல்லி: யமுனை நதியில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ள நீர் டெல்லி மாநகரின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது. இதனால் டெல்லி மாநகருக்குள் வெளிமாநில பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன.
வட இந்திய மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்க்கிறது. இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்கள் பெருவெள்ளத்தில் மிதக்கின்றன. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் அணைகளில் இருந்து நீர் பெருமளவு திறக்கப்படுகிறது. இதனால் யமுனை நதியில் 45 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. யமுனையில் அபாய அளவை தாண்டி 3 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பாய்கிறது. இந்த வெள்ளம் அப்படியே டெல்லி மாநகருக்குள் பல பகுதிகளையும் மூழ்கடித்து வருகிறது.
இதனையடுத்து 16,000க்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் ஹரியானா, இமாச்சல பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் டெல்லி எல்லைகளான காஷ்மீரி கேட், சிங்கு பார்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் டெல்லி மாநில அரசு அறிவித்திருக்கிறது. கனரக வாகனங்கள் டெல்லி மாநகருக்குள் அனுமதிக்கப்படாது எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் வெள்ளம் மூழ்கடித்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. யமுனை நதியின் நீர்மட்டம் மேலும் 3 அல்லது 4 மீட்டர் உயரும் அபாயம் உள்ளதால் மத்திய நீர்வளத்துறை ஆணையம், மிகவும் ஆபத்தான நிலைமை உருவாகி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களும் டெல்லி வெள்ளம் பாதித்த பகுதிகளில் மூடப்பட்டிருக்கின்றன.
டெல்லி தலைமை செயலகப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. ராஜ்காட்டில் இருந்து டெல்லி தலைமை செயலகம் செல்லும் சாலை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதால் டெல்லியில் குடிநீர் பிரச்சனை ஏற்படும் நிலைமை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications