கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி
டெல்லி: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் ரோச் இந்தியா நிறுவனத்தின் ஆன்ட்டிபாடி மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்கு மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மோசமான கொரோனா பாதிப்பு உடைய நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் காசிரிவிமாப் மற்றும் இம்தேவிமாப் (Casirivimab and Imdevimab) என்ற இரு ஆன்ட்டிபாடி காக்டெயில் மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்கு மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிறுவனம் அமெரிக்காவில் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெற சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி இந்த இரண்டு மருந்துகளை ரோச் இந்தியா நிறுவனத்தால் இந்தியாவில் இறக்குமதி செய்தி விற்பனை செய்ய முடியும்.
லேசான கொரோனா பாதிப்பு உடைய நோயாளிகளின் சிகிச்சைக்கு இந்த ஆன்ட்டிபாடி காக்டெயில் மருந்துகள் பயன்படுத்தப்படும். இது கொரோனா வைரசின் தீவிர தன்மையைக் குறைக்கும் என்றும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை மோசமாவதைத் தடுக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்புதல் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இந்த மருந்து விரைவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்டிபாடி காக்டெய்ல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவையாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications