மோடியின் மெகா திட்டம்.. "இவங்களுக்கு" எல்லாம் ரூ. 2500.. மத்திய அரசு மாஸ் பிளான்! இதை படிங்க
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக பெண்களுக்கும் பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டெல்லி: மத்திய அரசு சார்பாக பெண் தொழில்முனைவோருக்கு உதவித்தொகை அளிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவர்கள் தொழில் தொடங்க பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி
இந்த மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பாக பயிற்சி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் திறன் கொண்ட பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதிக அளவில் இளைஞர்கள் இருந்தாலும் திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இதை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்ன பயிற்சி
வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக இளைஞர்களை பயிற்சி அளிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சம்பாதிக்கும் விதமாக, முக்கியமாக திருமணம் ஆன பெண்களும் வருமானம் ஈட்டும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சுய தொழில், சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இதில்தான் உதவித்தொகையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தொழிற்பயிற்சி
அதன்படி குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். இவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசின் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த பயிற்சியின் மூலமாக தொழில் தொடங்கும் பட்சத்தில் இந்த உதவித்தொகை அளிக்கப்படும். பெண்கள் சுயமாக வேலைகளை செய்வதற்காக இந்த உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

எப்போது வரும்
இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மாற மாட்டேன். கண்டிப்பாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். மக்களுக்கு கண்டிப்பாக மாத 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். இதில் மாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில்தான் சில மாற்றங்களுடன் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் எல்லாம் வந்த பின் இந்த உரிமை தொகையை வரும் மார்ச் 8ம் தேதி.. அதாவது சர்வதேச மகளிர் தினத்தில் இருந்து வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக முதலில் செய்திகள் வந்தன. ஆனால் அதற்கு போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் திட்டம் கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் இன்னும் 5-6 மாதங்களில் நிறைவேற்றப்பட உள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications