“இந்துக்கள் இல்லையெனில்.. உலகம் அழிந்துவிடும்!” ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து!
டெல்லி: "இந்துக்கள் இல்லையெனில் உலகம் அழிந்துவிடும். வெவ்வேறு நாடுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நாம் கண்டோம், ஆனால் நாம் இன்னும் இங்கு இருக்கிறோம், அப்படியே இருப்போம். பாரதம் ஒரு அழியாத நாகரீகம்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது விவாதங்களை தூண்டியுள்ளது.
மூன்று நாட்கள் பயணமாக மோகன் பகவத் மணிப்பூர் சென்றிருக்கிறார். அங்கு ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களிடையே அவர் பேசியதாவது, "இந்துக்கள் இல்லையென்றால், உலகம் இருக்காது. பல்வேறு நாடுகள் அழிந்த போதிலும், இந்தியா ஒரு சேதமுமின்றி வளர்ந்து வருகிறது. சூழல்கள் வரும், போகும். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நாடுகள் அழிந்தன. கிரீஸ், எகிப்து மற்றும் ரோமா ஆகிய அனைத்து நாகரீகங்களும் பூமியில் மறைந்துவிட்டன.

முழு இந்தியாவும் நமக்குச் சொந்தமானது என்பது அனைவருக்கும் இடையிலான அடிப்படை புரிதல். ஆனால் தற்போது தலைவர்கள் அரசியல் கட்டாயங்கள் காரணமாக மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். பாரதவர்ஷம் (பாரதம்) காலம் காலமாக இருந்து வருகிறது. மகாபாரதம், ராமாயணம் மற்றும் காளிதாசரின் சிறந்த இலக்கியங்களிலும் பாரதவர்ஷம் பற்றிய முழுமையான குறிப்புகள் உள்ளன. மணிப்பூரிலிருந்து ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பரப்பே பாரதவர்ஷம் என வரையறுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா, பல பேரரசுகளின் மாற்றத்தை கண்டிருக்கிறது. பல அரசர்கள் இருந்த காலங்களும், பின்னர் ஒரு சிறந்த ஆட்சியாளர் இருந்த காலங்களும் உண்டு. நாம் சுதந்திரமாக இருந்த காலங்களும் உண்டு, தாக்குதலுக்கு உள்ளான காலங்களும் உண்டு. ஆனால் இந்தியா வலிமையாக நிலைத்து நின்று, ஐக்கியப்பட்ட ஒரு வரலாற்று நாடாக இருந்தது. இருப்பினும், 1945ல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசியல் நிலப்பரப்பு மாறியது. அதன்பிறகு இந்த விஷயத்தில் வெவ்வேறு கருத்துக்கள் எழுந்தது.
ஆர்எஸ்எஸ் எந்த அரசியலிலும் ஈடுபடுவதில்லை, எந்த அமைப்பையும் ரிமோட் கன்ட்ரோல் செய்வதில்லை. இந்தியா ஒன்றுப்பட வேண்டிய நேரமிது" என்று பேசியுள்ளர். மணிப்பூரின் இம்பாலில் பழங்குடி தலைவர்களைச் சந்தித்த பாகவத், சமூக ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications