தியாகத்துக்கான உதாரணம் ஆர்எஸ்எஸ்.. ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமை
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா இன்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதன்பிறகு பிரதமர் மோடி பேசுகையில், ‛‛ தியாகம் மற்றும் நாட்டை கட்டெழுப்புதல் உள்ளிட்டவற்றுக்கான உதாரணமாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது'' என்று பெருமையாக கூறினார்.
பாஜகவின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது. இந்த அமைப்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 1925ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாா் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடங்கினார். மக்களுக்கான கலாசார பாதுகாப்பு, ஒழுக்கம், சமூக சேவையை அடிப்படையாக கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

கடந்த 1925ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று இந்த அமைப்பு உதயமானது. ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கட்சியாக பாஜக செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ்ஸின் கிளையாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ்-ஸின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள அம்பேத்கர் சா்வதேச மையத்தில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆா்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமா் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசத்துக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையில் ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் 100 ஆண்டு பயணம் என்பது தியாகம், தன்னலமற்ற சேவை, நாட்டை கட்டமைத்தல் மற்றும் ஒழுக்கத்துக்கான எடுத்தக்காட்டாக உள்ளது. ஆர்எஸ்எஸ் பல துணை அமைப்புகளை கொண்டுள்ளார். ஆனால் அந்த அமைப்புகள் ஒருபோதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்பட்டது இல்லை. அதேபோல் பிளவுப்பட்டதும் இல்லை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள அனைத்து அமைப்புகளின் முதன்மை நோக்கம் ஒன்று தான். ‛‛தேசம் தான் முதல்' என்பது தான் அனைத்து அமைப்புகளின் நோக்கமாக இருக்கிறது. இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது. ‛நான்' என்ற எண்ணத்தை ‛நாம்' என சொல்ல கற்றுக்கொடுக்கும் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது.
ஆர்எஸ்எஸ் இந்த 100 ஆண்டுகளில் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளது. ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்ற ஒரே குறிக்கோளை இப்போது முன்னெடுத்து வருகிறது. பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் ஆர்எஸ்எஸ் தனது கொள்கையை விட்டு கொடுக்காமல் இன்றும் வலுவாக இருக்கிறது. நாட்டிற்கும், சமூகத்திற்கும் அயராது சேவை செய்து வருகிறது'' என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications