டிஸ்கவுண்ட்.. இந்தியாவின் உதவிக்கு சரியான நேரத்தில் கைமாறு செய்யும் ரஷ்யா! குட்நியூஸ்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் ரஷ்யா இந்தியாவிற்கு உதவ முன் வந்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. போர் காரணமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுக்கு ரஷ்யாதான் கச்சா எண்ணெய் அனுப்பி வந்தது.

ஆனால் போர் காரணமாக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா மறுத்துள்ளது. அதேபோல் ரஷ்யா மீதும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

ரஷ்யா கச்சா எண்ணெய்

ரஷ்யா கச்சா எண்ணெய்

இந்த பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவிடம் காசு கொடுத்து எண்ணெய் இறக்குமதி செய்வதும் சிக்கலாகி உள்ளது. இதனால் அமெரிக்கா மட்டுமின்றி மற்ற ஐரோப்பா நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொஞ்சம் அதிசயமாக 4 சதவிகித கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 104 டாலர் என்ற விலையை எட்டி உள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவிலும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை 100 - 110 என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல்- Rs 101.40 per litre, டீசல் - Rs 91.43 per litre ஆகிய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் இந்த விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு ரஷ்யா உதவ முன் வந்துள்ளது.

ரஷ்யா உதவி

ரஷ்யா உதவி

அதன்படி இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதேபோல் மற்ற சில பொருட்களையும் தள்ளுபடி விலையில் வழங்கிட ரஷ்யா முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த வர்த்தகத்தை ரூபாய்- ரூபிள் வர்த்தகமாக மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாம்.

 எவ்வளவு என்ன?

எவ்வளவு என்ன?

இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்குகிறது. இதில் 3 சதவிகிதம் வரை மட்டுமே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. ஆனால் கடந்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் எண்ணெய் தேவை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. தற்போது மேலும் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில்தான், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.

ஐநா

ஐநா

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட எந்த மேடையிலும் ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை. ரஷ்யாவை இந்தியா நேரடியாக எதிர்க்கவில்லை. கிட்டத்தட்ட ரஷ்யாவிற்கு இந்தியா செய்த மறைமுக உதவியாகவே இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு ரஷ்யா கைமாறு செய்ய முன் வந்துள்ளது. ரஷ்யாவின் தள்ளுபடியால் பெட்ரோல், டீசல் விலை இங்கே குறையும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது உயராமல் ஒரே விலையில் நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Recommended Video

    Russia இந்தியாவுக்கு செய்த மறக்க முடியாத உதவி | Oneindia Tamil
    வாங்கும் முடிவு

    வாங்கும் முடிவு

    இந்தியாவும் இந்த எண்ணெய்யை குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டுவதாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியா குறைந்த விலையில் தள்ளுபடியோடு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க விரும்புகிறது. இதற்காக சில இன்சூரன்ஸ் விஷயங்கள், சுத்திகரிப்பு விஷயங்கள் குறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த ஒப்பந்தம் முடிந்த பின் தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கப்படும். இது நல்ல விஷயம் என்று இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு அஞ்சாமல் இந்தியா துணிச்சல்களாக இந்த முடிவை எடுத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+