சூப்பர்... வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கும் இந்தியா! உக்ரைன்-ரஷ்யா போரால் செம யோசனை!
டெல்லி: உலகில் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைகளில் 25 சதவீதம் ரஷ்யா-உக்ரைன் நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய போர், பொருளாதார தடைகளால் பல நாடுகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
உலகில் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைகளில் 25 சதவீத பங்கை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் கொண்டுள்ளன. இந்நிலையில் தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
இதனால் உக்ரைனால் பிற நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. போருக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளால் ரஷ்யாவாலும் கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பல நாடுகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை தற்போது இந்தியா பயன்படுத்த முயன்று வருகிறது. சீனாவுக்கு அடுத்த படியாக அதிக கோதுமைகள் கொண்ட நாடாக இந்தியா உள்ள நிலையில் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய விபரங்கள் வருமாறு:

ஏற்றுமதி எவ்வளவு
2017 முதல் 2021 காலக்கட்டத்தில் ரஷ்யா, உக்ரைன் நாடுகள் முறையே 183 மில்லியன் டன், 91 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்திருந்தன. இதுதவிர ஐரோப்பிய ஒன்றியம் 157 மில்லியன் டன், அமெரிக்கா 125 மில்லியன் டன், கனடா 112 மில்லியன் டன், ஆஸ்திரேலியா 83 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்திருந்தன. இந்த நாடுகள் தான் கோதுமை ஏற்றுமதியில் பெரும்பகுதியை கொண்டுள்ளன.

இந்தியாவில் கோதுமை
இந்தியாவை பொறுத்தவரை இந்த காலக்கட்டத்தில் வெறும் 12.6 மில்லியன் டன் கோதுமை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. மொத்தம் 613 மில்லியன் டன் என்ற அளவில் இந்தியா கோதுமையை கையாண்டு இருந்தாலும் கூட 2 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. 80 சதவீதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்பட்டது. மீதமுள்ளவை சேமிக்கப்பட்டன.

அமெரிக்கா, கனடா
கோதுமை ஏற்றுமதியில் இந்தியா பின்தங்கிய நிலையில் இதற்கு நேர்மாறாக மற்ற நாடுகளில் கோதுமைகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. உதாரணமாக, 2017-2021 காலகட்டத்தில் அமெரிக்கா அதன் 404 மில்லியன் டன் கோதுமையில் 31 சதவீதத்தை ஏற்றுமதி செய்தது. கனடா தனது 186 மில்லியன் டன் கோதுமையில் 60.5 சதவீதத்தையும், ஆஸ்திரேலியா அதன் 146 மில்லியன் டன் கோதுமையில் 57 சதவீதத்தையும் ஏற்றுமதி செய்தது.

ரஷ்யா, உக்ரைன் ஏற்றுமதி
ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் கோதுமைகள் பொதுவாக ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகள், மேற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் எகிப்து மட்டும் தனது தேவையில் 93 சதவீதத்தை இந்த 2 நாடுகளில் இருந்து பெறுகிறது. எடைகளின் அடிப்படையில் இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக இருக்கும் இந்தோனேஷியா இந்த இரு நாடுகளிடம் இருந்து 30 சதவீதத்தை பெறுகிறது. ஆப்ரிக்க நாடுகளான சூடான் 80 சதவீதம், தான்சானியா 64 சதவீதம், லிபியா 53 சதவீதம், துனிசியா 52 சதவீதம், மற்றும் லெபனான் 77 சதவீதம், ஏமன் 50 சதவீதம், யுஏஇ 42 சதவீதம் பெறுகிறது.

கோதுமை தட்டுப்பாடு
உக்ரைன்-ரஷ்யா மோதலால் இந்த நாடுகளில் கோதுமை தட்டுப்பாடு உள்ளது. போர் நடப்பதால் உக்ரைனால் கோதுமை ஏற்றுமதி செய்யப்படவில்லை. பொருளாதார தடைகளால் ரஷ்யாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் தான் பல நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்த துவங்கி உள்ளது.

இந்தியாவின் இலக்கு
இதுபற்றிஅபெடா (APEDA)(வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) தலைவர் டாக்டர் மாதையன் அங்கமுத்து கூறுகையில், ‛‛எகிப்து, துருக்கி, நைஜீரியா, அல்ஜீரியா, மத்திய கிழக்கு, இந்தோனேஷியா, வியட்நாம், இலங்கை, வங்காளதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மொராக்கோ மற்றும் தான்சானியா நாடுகளில் கோதுமை ஏற்றுமதிக்கு கவனம் செலுத்தி வருகிறோம்.
கோதுமை ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உள்ள இடையூறுகளை சமாளித்து சவால்களை எதிர்கொள்ள பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

நல்ல வாய்ப்பு
இந்தியாவின் கோதுமை அறுவடை சீசன் என்பது மார்ச் முதல் மே வரை இருக்கும். தற்போது இது கோதுமைக்கான நெருக்கடி நிலையுடன் ஒத்துப்போகிறது. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா, வெளிநாடுகளுக்கான கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது.

அதிக விலைக்கு வாங்கனும்
இருப்பினும் இந்தியாவின் தேவையை கருத்தில் கொண்டு தான் ஏற்றுமதி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உணவுப் பாதுகாப்பு பிரசாரகர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபற்றி டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் லிபரல் ஸ்டடீஸ் பள்ளி உதவிப் பேராசிரியர் தீபா சின்ஹா கூறுகையில், ‛‛இந்தியாவில் கோதுமை உள்பட அனைத்து தானியங்களும் கிடைப்பதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமையாகும். மேலும் விவசாயிகளுக்கு இழப்பீடும் உரிய முறையில் வழங்க வேண்டும். இதற்கு பொது விநியோக அமைப்பு, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் தொடர வேண்டும். மேலும் ஏற்றுமதியின்போது அதிக விலை கிடைத்தால் விவசாயிகளிடம் இருந்தும் அரசு அதிக விலைக்கு வாங்க வேண்டும். அப்போது தான் விவசாயிகள் பயனடைவர்'' என்றார்.

எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு
இதுபற்றி வர்த்தக நிபுணர் ஒருவர் கூறுகையில், ‛‛இந்தியா தனது இருப்புகளில் இருந்து கோதுமையை ஏற்றுமதி செய்ய முடிவு செய்தால், சில வளர்ந்த நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் ஆட்சேபனை தெரிவிக்கலாம். ஏற்கனவே மார்ச் மாதத்தில் இந்தியா தனது இருப்புகளில் இருந்து அரிசியை ஏற்றுமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதை இந்தியா மறுத்துள்ளது. இதனால் கோதுமை ஏற்றுமதியில் எதிர்ப்புகள் கிளம்பலாம்'' என்றார்.

குறைந்தபட்ச ஆதார விலை
இதுதொடர்பாக உணவு உரிமை வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆணையர்களின் முன்னாள் முதன்மை ஆலோசகர் பிராஜ் பட்நாயக், 2014 இல் உலக வணிக அமைப்பின் பாலி அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமாதான பிரிவு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து இந்தியாவைத் தடுக்கவில்லை. மேலும் கையிருப்பில் கோதுமைகள் இருப்பதால் ஏற்றுமமதி செய்ய வேண்டும். ரஷ்யாவையும் உக்ரைன் கோதுமைகளை சார்ந்திருந்த நாடுகள் மாற்று நாடுகளை தேடுவதால் இந்தியாவின் ஏற்றுமதி முக்கியமானதாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்து கோதுமையை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இது இந்திய விவசாயிகளுக்கு உதவும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications