டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை எட்டுகிறது- ரஷ்யா 2-வது, இந்தியா 11-வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 50 லட்சத்தை எட்டுகிறது. கொரோனா பாதிப்பில் ரஷ்யா 2-வது இடத்திலும் இந்தியா 11-வது இடத்திலும் இருந்து வருகிறது.

உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 48,59,342 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,18,530 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 18,88,169 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது- தமிழகம் 2-வது இடம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது- தமிழகம் 2-வது இடம்

யு.எஸ். மரணங்கள்

யு.எஸ். மரணங்கள்

அமெரிக்காவில்தான் கொரோன பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,38,117 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 91,460 ஆகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 10,453 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

2-வது இடத்தில் ரஷ்யா

2-வது இடத்தில் ரஷ்யா

அமெரிக்காவை தொடர்ந்து 2-வது இடத்தில் ரஷ்யா இருந்து வருகிறது. ரஷ்யாவில் ஒரே நாளில் 8,926 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவில் மொத்தம் 2,90,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,722 ஆக உள்ளது.

ஸ்பெயின், இங்கிலாந்து

ஸ்பெயின், இங்கிலாந்து

கொரோனா பாதிப்பில் ஸ்பெயின் 3-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் இங்கிலாந்து 3-வது இடத்தில் உள்ளது. ஸ்பெயினில் 2,78,188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கிலாந்தில் 34,796 பேர் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர்.

பிரேசில், இந்தியா

பிரேசில், இந்தியா

பிரேசிலில் 2,45,595 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரேசிலில் கொரோனா மரணங்கள் 16,370 ஆக உள்ளது. இத்தாலியில் 2,25,886 ஆக கொரோனா பாதிப்பிருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை இத்தாலியில் 32,007 ஆக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியா 11-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

English summary
Russian coronavirus cases has reported 2,90,678.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X