தொடங்கியது சட்ட யுத்தம்! உதயநிதி ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் "வெறுப்பு பேச்சு" வழக்கு!!
டெல்லி: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என முழங்கிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேச்சு சட்டவிரோதமானது; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீசில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், சனாதன தர்மத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிடும் வகையில் உதயநிதி பேசியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் உதயநிதி பேசியிருக்கிறார். ஹிந்து மதத்தை கொசு, டெங்கு, கொரோனா, மலேரியாவுடன் ஒழிக்க வேண்டும் எனவும் உதயநிதி பேசியது ஹிந்துவாகிய என் உணர்வை புண்படுத்தி இருக்கிறது என தெரிவித்திருந்தார் வினீத் ஜிண்டால்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வினீத் ஜிண்டால் இன்று பொதுநலன் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாத சென்னை போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வினீத் ஜிண்டால் அம்மனுவில் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications