மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை! 2வது முறையாக முர்முவுக்கு போன பரபர அறிக்கை.. மம்தா ஷாக்
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி தேசிய மகளிர் ஆணையம் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் பரபரப்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய பட்டியலின ஆணையம் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 2வது முறையாக இது நடந்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இதற்கிடையே தான் மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி கிராமத்தில் தொடர்ந்து வன்முறை நடந்தது.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் அங்குள்ள பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. இதில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தான் ரேஷன் ஊழலில் ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறையினரை அவரது ஆதரவாளர்கள் தாக்கி தப்பிக்க வைத்தனர். இது தான் பெரிய பிரச்சனையாக மாறியது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஷாஜகான் ஷேக்கின் அலுவலகம் தீவைக்கப்பட்டது. தொடர்ந்து வன்முறை நடந்து வந்த நிலையில் ஷாஜகான் ஷேக் சில நாட்களுக்கு முன்பு தான் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் சந்தேஷ்காலி வன்முறை தொடர்பாக தேசிய பட்டிலின ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பட்டியலின ஆணையம் சார்பில் விசாரணை முடிந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் னெ அந்த ஆணையத்தின் அருண் ஹால்தார் பரிந்துரை செய்து திரெளபதி முர்முவிடம் அறிக்கை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு விசாரணையை முடித்து ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் அறிக்கை அளித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தால் அதில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த பிறகு ரேகா சர்மா அளித்த பேட்டியில், ‛‛சந்தேஷ்காலி வன்முறை என்பது இப்போது தான் நடந்ததாக நினைக்க வேண்டாம். இதற்கு முன்பும் மாநிலத்தில் பல வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்'' என பரிந்துரை செய்துள்ளோம்.
சந்தேஷ்காலி வன்முறை தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டிலின ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அந்த வரிசையில் தற்போது தேசிய மகளிர் ஆணையமும் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications