டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரான்-ஆப்கன் எல்லையில் தீக்கிரையான 500 டேங்கர் லாரிகள்... ஷாக்கிங் காட்டும் செயற்கைக்கோள் படம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள இஸ்லாம் குவாலா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 டேங்கர் லாரிகள் தீக்கிரையாயின.
இந்த தீ விபத்து நடந்த பகுதியை மாக்சரின் வேர்ல்ட்வியூ -3 செயற்கைக்கோள் படம் எடுத்து வெளியிட்டுள்ளது. பல நூற்றுக்காணக்கான லாரிகள் தீயில் கருகிய நிலையில் வரிசையாக நிற்கின்றன.

ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ள ஆப்கானிஸ்தான் பகுதியான இஸ்லாம் குவாலா நகரில் சுங்கத்துறை சோதனைச்சாவடி உள்ளது. ஈரானில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும், ஈரானுக்கு செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. எனவே, இந்த பகுதியில் எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

Satellite images shows 500 Oil Tankers Destroyed On Afghanistan-Iran Border

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி சுங்கத்துறை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரிகள் திடீரென தீப்பிடித்தன. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அடுத்தடுத்து லாரிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தன. ஈரான், ஆப்கானிஸ்தான் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை முழுவதுமாக அணைத்து முடிக்கவே 3 நாட்கள் ஆனது.

இந்த தீ விபத்தில் மொத்தம் 500 டேங்கர் லாரிகள் தீக்கிரையாயின. பல மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த தீ விபத்து நடந்த பகுதியை மாக்சரின் வேர்ல்ட்வியூ -3 செயற்கைக்கோள் படம் எடுத்து வெளியிட்டுள்ளது. பல நூற்றுக்காணக்கான லாரிகள் தீயில் கருகிய நிலையில் வரிசையாக நிற்கின்றன. மேலும், அங்கு இருந்து இன்னும் புகை வந்து கொண்டிருப்பதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

English summary
500 tanker lorries caught fire in the town of Islam Kuala along the Iran-Afghanistan border. Maxer's Worldview-3 satellite image of the area where the fire occurred was released. Hundreds of trucks lined up in a charred state of fire
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X