டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா வருகிறார் சவுதி அரேபியா இளவரசர்! உற்சாக வரவேற்புத் தர வெளியுறவுத்துறை திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் இந்தியா வருகிறார் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான்.

இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக செல்லும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வழியில் இந்தியா வருகிறார்.

Saudi Arabia Prince Mohammed bin Salman is coming to India next month

இந்தியா -சவுதி அரேபியா இடையே வலுவான நல்லுறவு நீட்டிக்கும் நிலையில் இவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

சவுதி இளவரசரின் இந்திய வருகையின் போது எரிசக்தி, பாதுகாப்பு, தீவிரவாதம் தடுப்பு, வர்த்தகம் ,முதலீடுகள் உட்பட இன்னும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.

இதேபோல் பிரதமர் மோடியும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் வர்த்தக கூட்டாளியாக திகழும் சவுதி அரேபியாவுடன் வலுவான நல்லுறவு நீடித்து வருவது கவனிக்கத்தக்கது. கச்சா எண்ணெய் தேவையை 18% சவுதியில் இருந்து இறக்குமதி செய்து இந்தியா பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியா வருகை தரவுள்ளார். உக்ரைன் -ரஷ்யா போருக்கு பிறகு பிரதமர் மோடியும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் சந்தித்து பேசவுள்ளதால் இது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

English summary
Prince Mohammed bin Salman of Saudi Arabia will visit India next month after accepting the invitation of External Affairs Minister Jaishankar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X