Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் ஸ்பெசாலிட்டி.. தமிழகத்தில் 50% இட ஒதுக்கீடு தந்த அரசாணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்த அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவிகித இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பல்வேறு மருத்துவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது என கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது.

மனு தள்ளுபடி

மனு தள்ளுபடி

இதையடுத்து 2022ம் ஆண்டு மருத்துவ கலந்தாய்வின் போது 50 சதவிகித இடஒதுக்கீட்டை பயன்படுத்த தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதற்கு தடை விதிக்க மறுத்ததோடு, இந்த ஆண்டே 50 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு அதுசார்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

 தமிழக அரசு தரப்பு வாதம்

தமிழக அரசு தரப்பு வாதம்

இந்த விவகாரத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ''இது சாதிவாரியான ஒதுக்கீடு இல்லை, மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. மேலும் இது மருத்துவ படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே மேலும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின்படி இந்த ஒதுக்கீடு சரியானதே என வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பு வாதம்

மத்திய அரசு தரப்பு வாதம்

மத்திய அரசு தரப்பில், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருழ்துவ மேற்படிப்பில் 2017ல் இருந்து இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனவே அதையே தொடர வேண்டும், இந்த ஆண்டும்சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கூடாது என தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வாதத்தில், ''அரசு மருத்துவர்களுக்கு 50சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு, அரசாணையையும் உடனடியாக இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது . இதனை செயல்படுத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது'' என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

50% இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி

50% இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 'சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்குகிறோம். தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்த அரசாணையை இடைக்காலமாக செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மருத்துவ உயர்படிப்புகளில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம். 50% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பிரதான வழக்கு விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும்,' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+