சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி: புதிய தொகுதி மறுவரையறை குழு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
டெல்லி: நாட்டின் மாநில சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி (SC/ST) சமூகத்தினருக்கான விகிதாசார பிரநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தொகுதி மறுவரையறைக்கான புதிய குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தொகுதி மறுவரையறையின் போது லிம்பு, தமாங் பழங்குடி மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை சிக்கிம், மேற்கு வங்க மாநில சட்டசபைகளில் உறுதி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டசந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது.

தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது மாநில சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக உரிய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கான விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதைக் கவனத்தில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு அல்லது தொகுதி மறுவரையறை செய்வதற்கான புதிய குழு அல்லது ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்கலாம். லிம்பு, தமாங் பழங்குடிகளுக்கு மாநில சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்பது அநீதியானது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில், 2026-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை தொகுதி மறுசீரமைப்புகான ஆணையத்தை அமைக்க முடியாது என்கிற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் 2026-ல் தொகுதி மறுவரையறை செய்யப்படும் வரை காத்திருந்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 2031-ல்தான் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பது ஏற்புடையது அல்ல எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் லிம்பு, தமாங் பழங்குடிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் மறுப்பது அரசியல் சாசன உரிமையை மறுப்பதாகவும் எனவும் சுட்டிக்காட்டினார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications