16 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு- அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சிவசேனாவின் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சிக்கு 2-வது பின்னடைவு இது.
Recommended Video
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய சிவசேனா அரசுக்கு எதிராக 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே.

ஜூலை 11 வரை தடை
இதற்கு எதிராக 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ந் தேதி வரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தது. அதேநேரத்தில் முந்தைய உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்தது.

முதல் பின்னடைவு
இதனையடுத்து ஜூன் 30-ந் தேதி சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது சிவசேனா. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது சிவசேனாவுக்கு மிகப் பெரிய பின்னடைவானது.

உத்தவ் ராஜினாமா
இதனையடுத்தே முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனால் பாஜக- அதிருப்தி சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முதல்வராகப் பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வரானார்.

மீண்டும் பின்னடைவு
இந்நிலையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றத்தை சிவசேனா தரப்பு மீண்டும் நாடியது. ஆனால் உச்சநீதிமன்றமோ, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கை உடனே விசாரிக்க முடியாது; ஜூலை 11-ந் தேதியன்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தது. இது சிவசேனாவுக்கு 2-வது பெரிய பின்னடைவு ஆகும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications