Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்ற நிகழ்ச்சிகளில் பூஜை வேண்டாம்.. அரசியலமைப்புக்கு மரியாதை செலுத்துங்கள்! நீதிபதி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீதிமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பூஜை, சடங்குகள் செய்வதை நிறுத்திவிட்டு, அரசியலமைப்பு சட்டத்திற்கு தலைவணக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா கூறியுள்ளார்.

கடந்த 3ம் தேதி மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட்டில் புதிய நீதிமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றிருந்தது. இதில் பங்கேற்றிருந்த நீதிபதி ஓகா இவ்வாறு பேசியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'ஜனநாயகம்' எனும் வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என குறிப்பிட்டுள்ள அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற நிகழ்ச்சிகளின் போது மதச் சடங்குகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

SC Justice Abhay S Oka urged to stop performing pujas and Archanas in court-related events

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீதிமன்றம் தொடர்பான நிகழ்வுகளுக்கு பூஜைகள், சடங்குகள் செய்வதை விட, அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையின் நகலுக்குப் பணிந்து நிகழ்வுகளைத் தொடங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து விரிவாக பேசிய அவர், "சில நேரங்களில் நீதிபதிகள் விரும்பத்தகாத விஷயங்களைச் சொல்லுவார்கள். நானும் கொஞ்சம் விரும்பத்தகாத ஒன்றைச் சொல்லப் போகிறேன். நீதிமன்றங்களில் நிகழ்ச்சிகளின் போது பூஜை-அர்ச்சனையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு பதிலாக, அரசியலமைப்பின் முகப்பு படத்தை வைத்து வணங்க வேண்டும். அரசியலமைப்பு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் கண்ணியத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த புதிய நடைமுறையை நாம் தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், "டாக்டர் அம்பேத்கர், மதச்சார்பின்மையைக் குறிப்பிடும் ஒரு சிறந்த அரசியலமைப்பை நமக்கு வழங்கியுள்ளார். நமது நீதிமன்ற அமைப்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அது நமது அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது. நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, ​​நீதிமன்ற வளாகங்களில் இதுபோன்ற மதப் பழக்க வழக்கங்களைக் குறைக்க முயன்றேன். ஆனால் அவற்றை முழுமையாகத் தடுக்க முடியவில்லை" என்றும் நீதிபதி அபய் எஸ் ஓகா கூறியுள்ளார்.

சமீப நாட்களாக மத செயல்பாடுகள் அரசியல் முழக்கங்களாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை எதிர்த்து கேள்வி எழுப்பவர்கள் மீது அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் நீதிபதி அபய் எஸ் ஓகாவின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+