புலம்பெயர் தொழிலாளர் போலி வீடியோ- பாஜக நிர்வாகி உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்கனும்- உச்சநீதிமன்றம்
டெல்லி: தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி உம்ராவ், நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் மாதம் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக பொய்யான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. உத்தரப்பிரதேசம், பீகார் மாநில பாஜகவினர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இருந்து இந்த வீடியோக்கள் பகிரப்பட்டன. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பீகார் மாநில சட்டசபையில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பிரச்சனை வெடித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த பீகார் மாநில அரசு, தமிழ்நாட்டுக்கு குழு அனுப்பியது. இதேபோல ஜார்க்கண்ட் மாநில அரசும் தமிழ்நாட்டுக்கு குழு அனுப்பியது. இந்த குழுவினர் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களை சந்தித்து விசாரித்தது. போலி வீடியோக்களில் இடம்பெற்றதை போல தமிழ்நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பொய்யான தகவல்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என சென்னை போலீசார் எச்சரித்தனர். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களான சீமான் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்தது.
மேலும் உபி பாஜக செய்தித் தொடர்பாளரான உம்ராவ் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் கோரி உம்ராவ், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றமோ தமிழ்நாடு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் உம்ராவ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன்ஜாமீன் தருவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்த போதும் உம்ராவ் முன்ஜாமீன் பெற்றார்.
முன்ஜாமீன் பெற்ற உம்ராவ், உச்சநீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், தம் மீதான முதல் தகவல் அறிக்கைகளை எப்.ஐ.ஆர்களை ஒன்றாக ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய உம்ராவ் பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். இந்த வழக்கில் உம்ராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை ஏற்று, பகிரங்க மன்னிப்பு கேட்பதாக உம்ராவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் வரும் திங்கள்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் உம்ராவ் ஆஜராக இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications