பிரசாந்த் பூஷண்...நீதிமன்ற அவமதிப்பு...தீர்ப்பு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!!
டெல்லி: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை ஒதுக்கியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் குறித்த கருத்தை திருப்பப் பெற பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் அரை மணி நேரம் கால அவகாசம் வழங்கி இருந்த நிலையில் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
சமூக வலைதளத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சனம் செய்திருந்தது தொடர்பான வழக்கில் மனிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை, தண்டனை ஏற்கத் தயார் என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறி இருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் மன்னிக்கபட வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் இன்று தெரிவித்து இருந்தார்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், டிவிட்டரில் கடந்த ஜூன் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, அதிநவீன மோட்டார் சைக்கிளை பாஜ தலைவருடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஓட்டியது குறித்தும் ஜூலை 22ம் தேதி டிவிட்டர் பதிவிட்டு இருந்தார்.
அந்தப் பதிவில் கொரோனா நடைமுறை விதிகளை தலைமை நீதிபதி பாப்டே பின்பற்றவில்லை என்றும், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளையும் அவர் சரிவர கையாளவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, உச்ச நீதிமன்றமே பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன் வந்து பதிவு செய்தது.
கடந்த வாரமா நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது தாம் மன்னிப்பு கோரப்போவதில்லை என்று பூஷண் அறிவித்து இருந்தார். மேலும், தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று வழக்கின் விசாரணை துவங்கி நடந்து வருகிறது. அரசு தரப்பு தலைமை நீதிபதி கே.கே. வேணுகோபால் வாதிடுகையில், ''நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பூஷணை எச்சரிக்கலாம். ஆனால், அவரை தண்டிக்க வேண்டாம். மீண்டும் மீண்டும் இந்த தவறை அவர் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அவருக்கு எச்சரிக்கை பிறப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக அவர் ஏற்கனவே குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து வாதிட்ட பூஷனின் வழக்கறிஞர் ராஜீவ் தவான் நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கோர முடியாது என்று வாதிட்டார்.
இதையடுத்து வாதிட்ட அரசு தரப்பு தலைமை நீதிபதி கே.கே. வேணுகோபால், ''நீதிமன்றம் பூஷண் அவர்களை எச்சரிக்க வேண்டும்'' என்று மீண்டும் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தனது தவறை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். பூஷண் அவர்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் மன்னிப்பு கோர மாட்டேன் என்று கூறி வருகிறார். அவர் கூறிய கருத்துக்களை திரும்ப பெறுவதற்காக அரை மணி நேர கால அவகாசத்தை அளிக்கிறோம்'' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பூஷண் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹார்லி டேவிட்சன், ''வலுவான விமர்சனங்களை எதிர்கொண்டால் மட்டுமே உச்ச நீதிமன்றம் உயிர்ப்புடன் இருக்க முடியும். வலுக்கட்டாயமாக நீதிமன்றம் பூஷணிடம் மன்னிப்பு கோருகிறது. அவமதிப்பு வழக்கில் யாரிடமும் கட்டாயமாக மன்னிப்பு கோர முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக பூஷணை தண்டித்து அவரை தியாகி ஆக்க வேண்டாம். இவரை தண்டிப்பதன் மூலம் இரண்டு வித விவாதங்கள் எழும். ஒரு தரப்பினர் அவர் தியாகி ஆகி விட்டார் என்று கூறுவார்கள். மற்றொரு தரப்பினர் அவர் சரியாக தண்டிக்கப்பட்டுள்ளார் என்று கூறுவார்கள்'' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications