ராமர் பாலத்தை கண்ணார பார்க்க சுவர் கட்டி கொடுங்க.. கடுப்பான உச்சநீதிமன்றம்- பொதுநலன் மனு டிஸ்மிஸ்!
டெல்லி: தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே ராமர் பாலத்தை பார்த்து வணங்கும் வகையில் சுவர் எழுப்ப வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை இடையே கடலில் சுண்ணாம்பு பாறை திட்டுகள் ஒரே தொடர்ச்சியாக இருக்கின்றன. இதனை புராண இதிகாசங்களுடன் தொடர்புபடுத்தி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமரால் இலங்கைக்கு கட்டப்பட்ட பாலம் என கூறப்படுகிறது. இதனாலேயே இது ராமர் பாலம் அல்லது ராம் சேது என அழைக்கின்றனர்.

அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில் சேதுக் கால்வாய் திட்டத்துகாக இந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ராமர் பாலம் சேதமடைந்துவிடும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சையின் போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி எழுப்பினார். இதற்காக கருணாநிதியை தலையை சீவுவோருக்கு பரிசு தரப்படும் என இந்து சாமியார் ஒருவர் அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் ராமர் பாலம் இருப்பதை காரணம் காட்டியே சேதுக்கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டு கைவிடப்பட்டது. ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாஜக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்து சட்ட ஆணையம் சார்பில் அசோக் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ராமர் பாலத்தை பொதுமக்கள் வணங்கும் வகையில் சுவர் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என அப்பொதுநலன் வழக்கில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் உச்சநீதிமன்றர் நீதிபதிகள் சஞ்சய் கிருஷ்ணன் கவுல், சுதான்ஷு தூலியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, ஒரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் வேலையா என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து அப்பொதுநலன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர். மேலும் இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் எனவும் மனுதாரரு9க்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications