மகாராஷ்டிரா புதிய அரசுக்கு எதிரான வழக்கில் காரசார வாதம்- நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வராக பாஜகவின் பட்னாவிஸ்; துணை முதல்வராக என்சிபியின் அஜித்பவார் பதவி ஏற்றதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக- என்சிபி அஜித் பவார் பிரிவு புதிய அரசை அமைத்துள்ளது. இதனால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்திருந்த என்சிபி, காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

பட்னாவிஸ் தலைமையிலான புதிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 3 கட்சிகளும் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது,
அப்போது, ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஆதரவு கடிதங்களை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மத்திய அரசு, ஆளுநர் தரப்பு உள்ளிட்டோர் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.
மேலும் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று காலை உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது.
முதலில் ஆளுநரின் செயலாளர் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தமது வாதங்களை முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் பட்னாவிஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அஜித் பவார் சார்பில் மணீந்தர்சிங், சிவசேனா சார்பில் கபில்சிபல், என்சிபி சார்பில் அபிஷேக் சிங்வி ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications