ராமர் பாலம்- தேசிய புராதான சின்னம்: சு.சுவாமி மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
டெல்லி: தமிழகத்தின் பாம்பன் தீவுகள் அருகே ராமர் பாலம் உள்ளதாகவும் அதை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
தமிழகத்தில் ராமேஸ்வரம் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்த திட்டுகள் தொடர்ச்சியாக இருப்பதால் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. அதேநேரத்தில் புராணங்கள் அடிப்படையில் இது ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டிய பாலம் என்கிற கருத்தும் உள்ளது.

தமிழக அரசியலில் ராமர் பாலம் மீக நீண்டகாலமாக சர்ச்சையாகவும் உள்ளது. இந்த ராமர் பாலத்தை முன்வைத்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாலம் கட்டுவதற்கு ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி கேட்டார். அதற்காகத்தான் கருணாநிதியின் தலைக்கு இந்து தீவிரவாதிகள் விலைவைத்து பிரகடனம் செய்த சம்பவங்களும் நடந்தது.
இந்த ராமர் பாலமானது, சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பேசுபொருளாகும் போதெல்லாம் விவாதத்துக்குரியதாகியது. இலங்கையின் மன்னார் மற்றும் பாக்ஜலசந்தி நீரிணைப்பை இணைக்க 83 கி.மீ ஆழத்துக்கு கால்வாய் உருவாக்கி கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதுதான் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். இதனை செயல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தீவிரம் காட்டியது.
ஆனால் இந்துத்துவா அமைப்புகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சேதுக்கால்வாய் திட்டத்தால் ராமர் கட்டிய பாலம் சேதமடையும்; ஆகையால் சேதுக் கால்வாய் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் சேது கால்வாய் திட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு நீண்டகாலமாக கிடப்பில் இருந்தது. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா ஹோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த விசாரணை நடைபெற உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications