சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்ட வழக்கு- உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதுதான்!
டெல்லி: சென்னை- சேலம் 8 வழி நெடுஞ்சாலை திட்டத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் விவசாயிகளுக்கு சில சாதகமான அதேநேரத்தில் அரசுக்கும் சாதகமான அம்சங்களை தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- சென்னை- சேலம் 8 வழிசாலைக்கு "நிலம் கையகப்படுத்த" சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும்
- சென்னை- சேலம் 8 வழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களை திருப்பி விவசாயிகளிடம் தர வேண்டும்.
- பொதுவாக திட்டங்களுக்கு மத்திய,மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்த உரிமை உள்ளது
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கான புதிய அறிவிக்கையை நெடுஞ்சாலை துறை வெளியிடலாம்.
- புதிய அறிவிக்கை வெளியிட்ட பின் மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை தொடரலாம்
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெற வேண்டும்.
- சுற்றுச் சூழல் அனுமதி இல்லாமல் சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது
- சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டம் தொடர்பாக மக்களிடமும் கருத்து கேட்க வேண்டும்
அடுத்து என்ன நடக்கும்?
சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டால் அதில் உள்ள பாதக அம்சங்களை முன்வைத்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடரலாம். அந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்து இத்திட்டம் அமல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.
-
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications