சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை.. எங்க கேள்வியே வேற.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்றும் அதில் உள்ள கேள்விகளையே விசாரிக்க போகிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்டஅமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

உச்ச நீதிமன்றம்
விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவம்பர் 14ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிப்பது குறித்து எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை

தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே
இந்நிலையில் சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சந்தான கவுடர், எஸ் அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் இடம் பெற்றனர்.

விசாரணைக்கு வந்தது
பழைய வழக்கில் இருந்து ஆர்.எப் நாரிமன், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்ஹேத்ரா ஆகியோர் 9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெறவில்லை. இந்நிலையில் சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

பெண்கள் நுழைவது
அப்போது தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்று அறிவித்தார். அத்துடன் சபரிமலை விவகாரத்தில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளைத் தான் விசாரிக்க இருக்கின்றோம் என்றார். கோயில் மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை கேட்க இருக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார்.

அனைத்து மதத்திலும்
இது வெறும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் அல்ல. அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க இருக்கிறோம். 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிப்போம். இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கிறோம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனிடையே இந்த வழக்கில் தன்னை நேரடியாக வாதிட அனுமதிக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் சபரிமலை தலைமை தந்திரி கோரிக்கை வைத்திருக்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications