5ம் வகுப்பில் ஒன்னா படிச்சாங்க.. இப்போ ராணுவம் - கடற்படை தளபதிகள்.. சுவாரசிய தகவல்.. அரிய நிகழ்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ராணுவ தளபதியாக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உபேந்திரா திவேதியும் கடற்படை தளபதியாக உள்ள தினேஷ் திரிபாதியும் பள்ளி பருவ நண்பர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் இந்திய பாதுகாப்பு படையில் மிகப்பெரிய பொறுப்புகளில் ஒரே சமயத்தில் வகிப்பது இந்திய ராணுவ வரலாற்றில் இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் ராணுவம், கடற்படை, விமானப் படை என முப்படைகள் உள்ளன. முப்படைகளுக்கு தலைமை தளபதி போக, தனித்தனியாக ஒவ்வொரு படைக்கும் தளபதிகள் உள்ளனர். நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் மனோஜ் பாண்டே பதவிக்காலம் நிறைவடைந்தது.

Indian Army Weird Trend


இதையடுத்து, ராணுவத் துணைத் தளபதியாக இருந்து வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி, நாட்டின் 30-வது ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உபேந்திர திவேதி காலாட்படை, டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளர். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி, 1984 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ஜம்மு- காஷ்மீர் ரைபிள்ஸில் நியமிக்கப்பட்டார்.

அதேபோல கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் ஆர் ஹரிகுமார் கடந்த ஏப்ரல் மாதம் பணி நிறைவு பெற்றார். இதையடுத்து, கடற்படை துணைத் தளபதியாக பணியாற்றி வந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் கடற்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு சில மாத இடைவெளியில் கடற்படை மற்றும் ராணுவத்திற்கு புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ராணுவத்தில் உயர் அதிகாரிகள் ஓய்வு பெறும் போது புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தற்போது ஒரு சுவாரசியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய ராணுவ தளபதியாக பொறுப்பெற்றுள்ள உபேந்திரா திவேதியும், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷும் பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்தவர்களாம்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சைனிகி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஒன்றாக படித்துள்ளார்கள். 5 ஆம் வகுப்பு ஏ செக்‌ஷனில் படித்த உபேந்திர திரிவேதி, தினேஷ் திரிபாதியின் வரிசை எண்கள் 931 மற்றும் 938 ஆகும். பள்ளி பருவ தோழர்களான இருவரும் 50 ஆண்டுகள் கழித்து ராணுவத்திலும் உயர் அதிகாரிகளாக ஒரே சமயத்தில் பதவி வகிக்கிறார்கள். இது மிகவும் அரிய ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ப்ளீஸ்.. இதான் என் லைஃப்.. கதறிய இளைஞர்! ஊர்க்காவல் படை தேர்வுக்கு தாமதாக வந்ததால் அனுமதி மறுப்பு


பள்ளி பருவ கால தோழர்களான இருவரும் உயர் பொறுப்பில் ஒரே சமயத்தில் இருப்பதால், இரு படைகளுக்குமிடையேயான புரிதல் மற்றும் உறவு மேலும் பலப்படும் என்று சொல்கிறார்கள். இவ்விரண்டு தளபதிகளின் பணி நியமனங்களும், ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளியில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிப்படிப்பை முடித்த பின்பும், இவர்கள் இருவருக்குமிடையே இருந்து வந்த நட்பு தொடர்ந்ததாகவும், தத்தம் பணியில் ஏற்படும் இடையூறுகள், சிக்கல்களை இவர்கள் இருவரும் பறிமாறிக் கொள்வதோடு பரஸ்பர நட்புறவை பேணி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு தளபதிகளின் பணி நியமனங்களும், ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளியில் நடைபெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+