ப்ளீஸ்.. இதான் என் லைஃப்.. கதறிய இளைஞர்! ஊர்க்காவல் படை தேர்வுக்கு தாமதாக வந்ததால் அனுமதி மறுப்பு
புதுவை: புதுச்சேரியில் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு இன்று அங்குள்ள 12 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 4,229 பேர் தேர்வு விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையத்திற்கு 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில், தாமதமாக வந்த இளைஞருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அந்த இளைஞர் தேர்வு மைய வாசலில் நின்று கண்ணீர் விட்டு அழுதார்.
புதுச்சேரி காவல் துறையில் ஊர்காவல் படை வீரர்கள் (ஆண், பெண்) ஆள் சேர்க்கைக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெற்றது. உடல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 3,034 ஆண்கள், 1,195 பெண்கள் என மொத்தம் 4,229 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வுக்காக ஆண்களுக்கு முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி, லாஸ்பேட்டை ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரி, மகாத்மா காந்தி வீதி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி மற்றும்
பெண்களுக்கு புதுச்சேரி செயின்ட் தெரேசா வீதி பெத்திசெமினார் பள்ளி, உப்பளம் நேதாஜி நகர் இமாகுலேட் பெண்கள் பள்ளி என மொத்தம் 12 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்ப்படுவார்கள். நுழைவு சீட்டில் அவர்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்து வர வேண்டும். நுழைவு சீட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி, பான் கார்டு இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
தேர்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 9.30 மணிக்கு மூடப்படும். அதற்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் கைரேகை வருகைப்பதிவு செய்யப்பட இருப்பதால் தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, நுழைவுச்சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்திற்கு கொண்டு வரவேண்டும். கைப்பை, செல்போன், புளுடூத் சாதனங்கள், ஹெட்போன்கள், கால்குலேட்டர்கள், பென்டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை என பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்வர்களுக்கு விடுத்து இருந்தது.
இந்த நிலையில், புதுவையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் ஊர்க்காவல் படை காவலர்களுக்கான தேர்வு எழுந்த வந்த சில இளைஞர்கள் தாமதமாக வந்தனர். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு இளைஞர் மட்டும், , அண்ணா ப்ளீஸ்.. ப்ளீஸ்... இதான் என் லைஃப்... உள்ள விடுங்க அண்ணா ப்ளீஸ்... உள்ளே அனுமதியுங்கள் என கதவை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்து கெஞ்சியபடி கண்ணீர் விட்டார்.
ஆனாலும் தாமதமாக வருபவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால், போலீசார் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதனால், என்ன செய்வது என்று தெரியாது.. அந்த வாலிபர் கண்ணீருடன் கேட்டை பிடித்தபடி அங்கேயே கதறி அழுதார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications