Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க
Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு பெற்றோரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உறவுகளுக்குள் தகராறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற எல்லா விஷயங்களிலும் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
பிரச்சனை தீரும்
உறவுகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சனியின் ஆதிக்கம் நன்றாக இருப்பதால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் நினைக்காத காரியங்கள் எல்லாம் நடக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. வீடு கட்டுவது, வீடு மாற்றும் யோகம் உண்டு.
கவனம்
அஷ்டமத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் வண்டி வாகனங்களில் விபத்து, பின்பக்கத்தில் வலி, உங்களுக்கும், நண்பர்களுக்கும் பிரச்சனைகள் உருவாகுவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணத்தினால் பிரச்சனைகள் உண்டு. அதனால் கவனம் தேவை. மனைவிக்கு முகம், பல், கர்ப்பப்பை பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
அனுகூலம்
பாக்கியத்தில் புதன், சூரியன் இணைந்திருப்பதால் வீட்டில் நிறைய நல்லவை நடக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் யோகம் உண்டு. வேலையில் சிறந்து விளங்குவதற்கான யோகம் உண்டாகும். பண வரவு அற்புதமாக இருக்கும். ஐயப்பன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். போலீஸ், கேஸ், வழக்கு, வம்புகளில் இருந்து தள்ளியிருப்பது நன்மையைத் தரும். புதன்கிழமை தோறு பசு மாடுகளுக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு உணவு தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications