மெட்ரோ ரயில் நிதி: தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? லோக்சபாவை அதிரவைத்த திமுக டிஆர் பாலு!
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 5 ஆண்டுகளாக மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட ஒதுக்கீடு செய்யவில்லை; மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என லோக்சபாவில் திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு எம்பி வேதனையை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் 2-ம் கட்டம் 60% நிறைவடைந்தும் விட்டது என்றும் டிஆர் பாலு எம்பி சுட்டிக்காட்டினார்.
18-வது லோக்சபாவின் 2-வது கூட்டம் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை லோக்சபா கூடியதுமே நீட் முறைகேடுகள் விவகாரத்தை முன்வைத்து காரசார விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். ஆனால் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறவில்லை என பதிலளித்தார் தர்மேந்திர பிரதான்.

இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது லோக்சபா திமுக குழுத் தலைவர் டிஆர் பாலு பேசியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்தில் 60% பணிகள் நிறைவேறிய நிலையில் கூட மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. வெளிச்சந்தையில் இருந்து கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்த்தால், நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு டிஆர் பாலு பேசினார்.
முன்னதாக திமுக எம்பி கலாநிதி வீராசாமி பேசுகையில், நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் நீட தொடர்பாக விவாதம் நடக்கும் போதெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் வராமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications