பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் புகார்கள் தீவிரமானவை- தலைமை நீதிபதி சந்திரசூட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார்கள் தீவிரமானவை- விசாரிக்கப்பட வேண்டியவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மேலும் புகாருக்குள்ளாகி இருக்கும் பாஜகவின் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Serious allegations against Wrestling Federation of India president Brij Bhushan: CJI Chandrachud

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங். இவருக்கு வயது 66. பிரிஜ் பூஷண் மற்றும் மல்யுத்த பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தருகின்றனர் என்பது நீண்டகால புகார்.

தங்களுக்கு பாலியல் தொல்லை தரும் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்திலும் குதித்தனர் மல்யுத்த வீராங்கனைகள். டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டது. டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளுடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் ஒரு விசாரணை குழுவையும் கூட மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் ஒதுங்கி இருக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. தம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பிரிஜ் பூஷண் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதனிடையே மேரிகோம் கமிட்டி தமது அறிக்கையை மத்திய அரசிடமும் அளித்தது. ஆனால் இந்த அறிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சிங் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவும் இல்லை. இது மல்யுத்த வீராங்கனைகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். டெல்லியில் இரவு பகலாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றன. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதனிடையே 7 மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் உள்ளிட்டோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. மல்யுத்த வீராங்கனைகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். இன்றைய விசாரணையின் போது, மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்திருக்கும் புகார்கள் மிக தீவிரமானவை- விசாரிக்கப்பட வேண்டியவை. மல்யுத்த வீராங்கனைகளின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறோம் என்றார் தலைமை நீதிபதி சந்திரசூட்.

அப்போது ஒரு சிறுமி உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் இந்த புகார் அளித்துள்ளனர்; இப்புகார் தொடர்பான கமிட்டியின் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. புகாருக்கு உள்ளானவர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவும் செய்யவில்லை என சுட்டிக்காட்டி வாதாடினார்.

அப்போது பாஜக எம்பி பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேம் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+