ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில் மனித பரிசோதனை... தயாரானது சீரம்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஆய்வை இந்தியாவில் இரண்டாவது, மூன்றாம் கட்டமாக மனித பரிசோதனை மேற்கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட்க்கு இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. முன்னதாக இதற்கான அனுமதி கேட்டு சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பித்து இருந்ததாகவும். கூடுதலாக தெளிவான நெறிமுறைகள் மற்றும் தகவல்களை அனுப்புமாறு இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு கேட்டுக் கொண்டதால், மீண்டும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் மாற்றம் செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து

ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலில், ''சீரம் இன்ஸ்டிடியூட்டின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த பின்னர் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிய வந்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ்

டெல்லி எய்ம்ஸ்

இந்த மனித பரிசோதனைக்கு இந்தியாவில் 18 வயதை கடந்தவர்கள் 1600 பேர் உட்படுத்தப்படுவார்கள். நாட்டின் 17 இடங்களில் டெல்லி எய்ம்ஸ், புனேவில் இருக்கும் பிஜே மருத்துவக் கல்லூரி, பாட்னாவில் இருக்கும் ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட், சண்டிகரில் இருக்கும் மருத்துவ முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஜோத்பூர் எய்ம்ஸ், கோரக்பூரில் இருக்கும் நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூரில் இருக்கும் ஜெஎஸ்எஸ் அகாடமி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மனித பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஆஸ்ட்ரோஜெனிகா

ஆஸ்ட்ரோஜெனிகா

ஆரோக்கியமான இந்தியர்களிடம் இந்த மருந்து எந்தளவிற்கு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்பதை சீரம் இன்ஸ்டிடியூட் கண்காணிக்கும். ஆஸ்ட்ரோஜெனிகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

சீரம் தயாரிப்பு

சீரம் தயாரிப்பு

இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் - ஸ்வீடன் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை பெரிய அளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் மனிதர்களின் இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளும்.

Recommended Video

    கொரோனா தடுப்பூசி: 2.1 Billion Dollorஐ கொட்டுகிறது America
    முதல் இரண்டு கட்டம்

    முதல் இரண்டு கட்டம்

    பிரிட்டனில் ஐந்து இடங்களில் மனிதர்களிடம் முதல் இரண்டு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவை இரண்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்டத்திலும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு கிடைத்துள்ளது. எந்த நேரத்திலும் இந்த தடுப்பு மருந்தின் வெற்றி அறிவிப்பு மக்களுக்கு கிடக்கலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+