ஹோட்டல் - ரெஸ்டாரண்ட்டுகளில் இனி சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகளில் வாடிக்கையாளர்கள் சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதேபோல் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் நிர்வாகங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயமாக சேவை கட்டணத்தை வசூலிக்கும் உரிமை கிடையாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப்போது நாம் செல்லும் பல ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்டுகள் சாப்பிடும் உணவுகளுக்கு வழங்கப்படும் கட்டணத்துக்கான பில்லில் வரி என்பது சேர்க்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி என்பது நம்மிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பல ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் நம்மிடம் இருந்து சேவை கட்டணம் (Service Charge) என்பது வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டில் சிசிபிஏ எனும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority or CCPA) வழிக்காட்டு விதிமுறைகளை வெளியிட்டது.

அதில் ‛‛உணவு பில்களுடன் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் என்பது வசூலிக்க கூடாது. வேறு எந்த பெயரிலும் சேவை கட்டணம் என்பது கூடாது. சேவை கட்டணத்தை செலுத்தும்படி வாடிக்கையாளர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்தக்கூடாது. சேவை கட்டணம் வழங்குவது என்பது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பம் சார்ந்தது என்று அறிவித்து இருந்தது.
இதற்கு ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து ரெஸ்டாரண்ட் அசோசியேஷன்ஸ் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி பிரதீபா எம் சிங் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, ‛‛மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என்பது வெறும் ஆலோசனை வழங்கும் அமைப்பு இல்லை. அந்த ஆணையம் என்பது நியாயமற்ற முறையில் நடக்கும் வர்த்தக நடைமுறையை தடுப்பது மற்றும் நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் வகையிலான வழிக்காட்டுதல்களை வெளியிடும் அதிகாரம் படைத்த அமைப்பாக உள்ளது.
இதனால் அதன் வழிக்காட்டுதல்கள் ஏற்கப்பட வேண்டியது தான். உணவு பில்கள் செலுத்தும்போது அதற்கான சேவை கட்டணத்தை வழங்குவது என்பது வாடிக்கையாளர்கள் முன்வந்து செலுத்துவது தான். மாறாக உணவகங்கள், ரெஸ்டாரண்ட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை கட்டணத்தை வசூலிக்க முடியாது. மீறி வசூலிக்கும்பட்சத்தில் அது சட்டவிரோதமான வர்த்தக நடைமுறைக்கு ஒப்பானதாக கருதப்படும்'' என்று கூறினார். மேலும் ரெஸ்டாரண்ட் அசோசியேஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதுமட்டுமின்றி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதல்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ரெஸ்டாரண்ட் அசோசியேஷனுக்கு ரூ.1 லட்சம் செலுத்த அதிரடியாக உத்தரவிட்டது.
அதோடு அந்த அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தார் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகளில் சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. ஒருவர் விரும்பினால் மட்டுமே தாமாக முன்வந்து சேவை கட்டணம் செலுத்தலாம். மற்றபடி ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் சேவை கட்டணம் செலுத்தும்படி கூறினால் அதனை பொதுமக்கள் புறக்கணிக்கலாம் என்பது இந்த நீதிமன்ற தீர்ப்பின்படி உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications