டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெ.தேசம் பாணியில் 7 அதிமுக ராஜ்யசபா எம்.பிக்கள் விரைவில் பாஜகவில் கூண்டோடு ஐக்கியம்?

Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்குதேசத்தின் ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜகவில் கூண்டோடு ஐக்கியமானதை போல அதிமுகவின் 7 ராஜ்யசபா எம்.பிக்கள் விரைவில் கட்சி தாவ இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபாவில் தற்போது அதிமுக எம்.பிக்களாக இருக்கும் முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, செல்வராஜ், விஜிலா சத்யானந்த் ஆகியோரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், ஆர். வைத்திலிங்கம் ஆகியோரது பதவிக் காலம் 2022-ல் முடிவடைகிறது.

தற்போதைய தேர்தல் மூலம் முகம்மது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.க்களாகி உள்ளனர். லோக்சபாவில் தனிப்பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜகவால் ராஜ்யசபாவில் எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற முடிவதில்லை.

ராஜ்யசபா பலம்

ராஜ்யசபா பலம்

ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பிக்கள் உள்ளனர். தற்போதைய நிலையில் பாஜகவுக்கு 78; காங்கிரஸுக்கு 48; அதிமுகவுக்கு 13; திரிணாமுல் காங்கிரஸ்-13; சமாஜ்வாதி 13; பிஜூ ஜனதா தள் -6; சிவசேனா -4; திமுக-3 என்கிற நிலை இருக்கிறது.

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

ராஜ்யசபாவில் மசோதாக்கள் நிறைவேற 123 எம்.பிக்கள் ஒப்புதல் தேவை. பாஜக கூட்டணிக்கு இந்த பெரும்பான்மை இல்லை என்பதால் பிற கட்சி எம்.பிக்களை கூண்டோடு வளைத்துப் போட்டு வருகிறது.

கூண்டோடு தாவிய எம்பிக்கள்

கூண்டோடு தாவிய எம்பிக்கள்

6 ராஜ்யசபா எம்.பிக்களைக் கொண்டிருந்த தெலுங்குதேசத்தின் 4 எம்.பிக்களை ஒட்டுமொத்தமாக வளைத்து பாஜகவினராக்கிக் கொண்டது. அதேபாணியில் அதிமுகவின் 7 எம்.பிக்களுக்கு குறி வைத்திருக்கிறதாம் பாஜக.

அதிமுக எம்பிக்கள் ஜம்ப்

அதிமுக எம்பிக்கள் ஜம்ப்

தென் மாவட்ட பெண் எம்.பி, மேற்கு மாவட்ட மூத்த எம்.பி உள்ளிட்ட சிலர் பாஜகவின் கண் அசைவுக்காக காத்திருக்கிறார்களாம். தற்போதைய ராஜ்யசபா தேர்தல் முடிந்த உடன் இந்த ஆட்டத்தை தொடங்கப் போகிறதாம் பாஜக,

English summary
Delhi sources said that Seven AIADMK Rajyasabha MPs likley to join BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X