3 மாதத்துக்கு கடும் வெயில்..இந்த 10 மாநிலங்களில் சுட்டெரிக்கும்..வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா கூறியுள்ளார். அதேபோல மழையை பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டில் வெயில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வாட்டி வதைக்க தொடங்கியது.
கடுமையான வெப்பம் அப்போதே தகிக்கத் தொடங்கியதால் நடப்பு ஆன்டு மே, ஜூன் மாதங்களில் வெயில் எப்படி இருக்குமோ என மக்கள் எண்ணாமலும் இல்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே இருந்து வருகிறது.

இயல்பை விட அதிகமாக இருக்கும்
இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மகாபத்ரா கூறியதாவது:- நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான கோடை காலத்தில் நாட்டில் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும்.

சமவெளி பகுதியில் 40 டிகிரி..
தென் இந்திய தீப கற்ப பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்ப நிலை இயல்பான அளவு அல்லது அதை விட குறைவான அளவு இருக்க வாய்ப்பு உள்ளது. பீகார், ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, குஜராத் , பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை அதிக நாட்கள் வீசும். சமவெளி பகுதியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

வெப்ப அலை என்றால் என்ன?
சமவெளி பகுதியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், கடலோரப்பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் அளவிற்கும், மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் தகித்தால் அது வெப்ப அலை என்று சொல்லப்படுகிறது. நமது நாட்டில் கடந்த 1901- ஆம் ஆண்டில் இருந்து வெப்ப நிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்போது முதல் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவானது நடப்பு ஆண்டில் தான் பதிவானது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான அளவு மழை பெய்யும்
அதேபோல மழையை பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வட மேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப பகுதிகளில் மழையின் அளவு இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட கூடுதலாகவோ இருக்கக்கூடும். வடகிழக்கு இந்தியாவில் வழக்கமான அளவு மழை பெய்யும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications