டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துப்பாக்கிச் சூடு நடத்தியும் அசராத ஷாகீன் பாக் சிங்கப் பெண்கள்.. என்ன செய்தார்கள் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி ஷாகின் பாக்கில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீது துப்பாக்கிச் சூடு - வீடியோ

    டெல்லி: டெல்லி ஷாகீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் அங்கு போராட்டம் நடத்தி வந்த பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்தனரே தவிர அசராமல் இருந்தனர்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் மிகவும் தீவிரமாகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஷாகீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் மட்டும் மிகப் பெரிய போராட்டத்தை கடந்த 40 நாட்களுக்கு மேலாக நடத்திவருகின்றனர்.

    அது போல் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் இது போன்ற போராட்டம் நடைபெறுகிறது.

    போராட்டம்

    போராட்டம்

    இந்த நிலையில் நேற்றைய தினம் ஷாகீன் பாக் போராட்ட களத்திற்கு ஒருவர் வந்தார். அவர் திடீரென போலீஸார் நிற்கும் பேரிகார்டுக்கு அருகிலேயே அவர் வானத்தில் இரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர் அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    துப்பாக்கி

    துப்பாக்கி

    அவரது பெயர் கபில் குஜ்ஜர் என்றும் உத்தரப்பிரதேச மாநிலம் தல்லுபுரா கிராமத்தைச் தேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த நபர் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் ஜெய் ஸ்ரீராம் என முழங்கியுள்ளார். மேலும் இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்றும் கபில் குஜ்ஜர் தெரிவித்தார்.

    தேசிய கீதம்

    தேசிய கீதம்

    கடந்த 3 நாட்களில் நடந்த 2ஆவது துப்பாக்கிச் சூடு இதுவாகும். இந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவுடன் அங்கிருந்த பெண்களும் குழந்தைகளும் அச்சமடைந்தனர். எனினும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவர்களில் சிலர் தேசிய கீதமான ஜன கன மன பாடினர்.

    சிங்கப் பெண்கள்

    சிங்கப் பெண்கள்

    இன்னும் சிலர் குரானை படித்தனர். மேலும் சிலர் டெல்லி போலீஸை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். துப்பாக்கியை பார்த்தவுடன் கொஞ்சமும் அசராமல் தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் தேசிய கீதம் பாடிய இந்த பெண்கள் அனைவரும் உண்மையில் சிங்கப் பெண்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

    English summary
    After hearing gun shooting sound, Shaheen Bagh ladies started to chant National Anthem instead of running.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X