முதலிரவை வீடியோ எடுத்த புதுமாப்பிள்ளை.. அதை பார்த்த நண்பன்.. அப்புறம் தான் பெரிய சிக்கலே
டெல்லி: நண்பர்கள் கேட்கிறார்கள் என்று தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அனுப்புவது எப்போதுமே சிக்கலில் தான் முடியும். அதேபோல் தனிப்பட்ட முறையில் உள்ள ரகசியங்களை நண்பர்கள் உள்பட யாரிடமும் பகிர்ந்து கொள்வதுமே சிக்கலை ஏற்படுத்தும். இப்படியான சிக்கலில் பெண்கள் தான் பொதுவாக மாட்டுவார்கள். தனது ஆண் நண்பன் கேட்கிறான் என்று வீடியோக்களை அனுப்பி பின்னாளில் அவதிப்படுவார்கள். இங்கு ஒருவர் முதலிரவு வீடியோவை அனுப்பி சிக்கலில் சிக்கியுள்ளார்.
இன்றைய 2கே கிட்ஸ்களில் சிலருக்கு ரகசியம் என்று எதுவுமே இல்லை. எதை பற்றியும் கவலைப்படாமல் ரகசியங்களை பகிர்கிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள், காதலன் தானே கேட்கிறான் என்று நினைத்து தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செல்ஃபி எடுத்து அனுப்புகிறார்கள். சிலர் காதலர்களுடன் எல்லை மீறுவதும் அடிக்கடி நடக்கிறது. அப்படி நடப்பதை வீடியோவும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

அதையும் சில நேரங்களில் தங்களுக்கு நெருங்கியவர்கள், தங்களது தோழிகள், நண்பர்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். அப்படி அனுப்புவது பின்னாளில் அவர்களுக்கே பெரிய சிக்கலாக முடிந்துவிடுகிறது. அப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் புதிதாக திருமணம் ஆன மாப்பிள்ளை, தன்னுடைய மனைவியுடன் நடத்திய முதலிரவை வீடியோ எடுத்துள்ளார். அதை ஒரு நாள் தெரியாத்தனமாக நண்பன் பார்க்க, நண்பனும் அதை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்படி கேட்டு வாங்கிய பின்னர், அது புதுமாப்பிள்ளைக்கு சிக்கலாக மாறி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவம் மிஷ்ரா என்பவர் மீது அவரது நண்பர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்படி சிவம் மிஷ்ராவின் நண்பர் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் முடித்துள்ளார். அப்போது முதலிரவு நிகழ்வுகளை அவர் வீடியோவாக படம் பிடித்து வைத்திருந்தாராம். இதனை செல்போனில் கண்ட, சிவம் மிஸ்ரு அந்த வீடியோவை தனக்கு அனுப்பச் சொல்லி கேட்டாராம். நண்பன் கேட்டதற்காக தனது முதலிரவு வீடியோவை அனுப்பி உள்ளார்.
அதை சிவம் பார்த்து ரசித்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை சமூகவலைத் தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி நண்பரை மிரட்ட ஆரம்பித்து உள்ளார். இதை காரணம் காட்டி பலமுறை நண்பரிடம் இருந்து பணம் பறித்து வந்துள்ளார். தொடர்ந்து நண்பர் மிரட்டி வந்ததால், சிவம் மீது தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் சிவம் மிஸ்ரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications