Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட ஒற்றுமையை பாருங்க! துபாயில் சசிதரூரை பார்த்ததும் அக்தர் சொன்ன ஒற்றை வார்த்தை! தெறிக்கும் கமெண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்த சோயிப் அக்தரும், காங்கிரஸ் எம்பி சசிதரூம் துபாயில் திடீரென சந்தித்தனர். சோயிப் அக்தருடன் சேர்ந்து எடுத்த செல்பியை சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் வித்தியாசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் சசிதரூர். இவர் கேரளாவை சேர்ந்தவர். தற்போது திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாகவும் உள்ளார். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு தேசிய தலைவர் தேர்தல் நடந்தது.

இதில் சோனியா ஆதரவுடன் மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட்டார். இந்த தேர்தலில் சசிதரூரும் தனித்து களமிறங்கினார். மல்லிகார்ஜூன கார்கேவை ஒருமனதாக தேர்வு செய்ய மேலிடம் நினைத்த நிலையில் சசிதரூர் ரேஸில் இறங்கினார். இதனால் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Shashi Tharoor shares picture with Pakistan ex fast Bowler Shoaib Akhtar in twitter, both meets in Dubai

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். சசிதரூர் தோல்வியடைந்தார். இருப்பினும் சசிதரூர் கவலை கொள்ளவில்லை. உண்மையில் தேர்தலில் போட்டியிட்டது மகிழ்ச்சி. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்துகள் என அப்போது தெரிவித்து இருந்தார்.

சசிதரூர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். இதனால் அவர் உலகில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதுபற்றி கமெண்ட்டுகள் தெரிவிப்பார். மேலும் அவர் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். மேலும் அவர் அடிக்கடி வேடிக்கையாகவும் சில விஷயங்களை பதிவிடுவார்கள். இதனால் அவரை கட்சி பாகுபாடு இன்றி ஏராளமானவர்கள் ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சசிதரூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். போட்டோவில் சசிதரூர், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தருடன் செல்பி எடுத்தபடி உள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் சந்திப்பு நடந்தது பற்றி விபரங்களை குறிப்பிட்டு இருந்தார். அதோடு சோயிப் அக்தரை பற்றி பெருமையாகவும் சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக சசிதரூர், ‛‛துபாய் வழியாக டெல்லிக்கு திரும்பினேன். அப்போது ஆச்சரியமளிக்கும் வகையில் சோயிப் அக்தர் ஹலோ சொன்னார். வேகப்பந்து வீச்சில் ஸ்மார்ட்டான அதேநேரத்தில் ஊக்கமளிக்கும் மனிதர் அவர். எல்லை கடந்த அவருக்கு நம் நாட்டில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வேளையில் என்னை வாழ்த்த வந்த அனைத்து இந்தியர்களும் அக்தருடன் செல்பி எடுக்க விரும்பினர். நாங்கள் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து நல்ல கருத்துரையாடல் இருந்தது'' என தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ட்விட்டர் பயனாளர்கள் கமெண்ட்டுகள் தெறிக்க விட்டு வருகின்றனர். சிலர் சோயிப் அக்தர் மற்றும் சசிதரூர் ஆகியோர் பார்க்க ஒன்றுபோல் தெரிவதாக தெரிவித்தனர். இருவரின் முகம், ஹேர்ஸ்டைல் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு இருவரும் பார்க்க ஒன்றுபோல் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். நவீன் என்பவர், ‛‛எல்லை பிரிக்கிறது. ஹேர்ஸ்டைல் இணைக்கிறது'' என தெரிவித்தார். அன்ஜ்னா என்பவர் கூறுகையில், ‛‛நான் எனது கண்களை சோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் எனக்கு எல்லாம் இரண்டாக தெரிகிறது'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+