அகில இந்திய காங். தலைவர் பதவி- சோனியா சாய்ஸ் அசோக் கெலாட்டை எதிர்த்து சசி தரூர் போட்டி?
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி முன்னிறுத்தும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை எதிர்த்து சசி தரூர் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2109-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. நாடு முழுவதும் மொத்தம் இரட்டை இலக்கில்தான் காங்கிரஸ் வென்றது. இதனால் லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸால் பெற முடியவில்லை.

தலைவர் இல்லாத காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதன்பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்படவும் இல்லை; தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை; இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

கலக குரல்
இது காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும்; காங்கிரஸ் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவை என ஜி23 தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்; கடிதம் எழுதிப் பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் மவுனமாக அத்தனையையும் கடந்தது.

குலாம் நபி ஆசாத் விலகல்
கடந்த ஆண்டு 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அப்போது திடீரென முழித்துக் கொண்டதைப் போல காங்கிரஸ் மேலிடம் சில சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அத்துடன் கலகக் குரல் எழுப்பிய ஜி23 தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது. ஆனாலும் இந்த முயற்சிகள், நடவடிக்கைகள் தொடரவில்லை. இதனையடுத்து கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸுக்கு முழுக்குப் போட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸில் இருந்து விலகினார். காங்கிரஸின் பேரழிவுக்கே ராகுல் காந்திதான் காரணம் என கடுமையாக அவர் விமர்சித்தார். குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கூண்டோடு கலைந்தது. தெலுங்கானா உள்ளிட்ட மாநில மூத்த தலைவர்களும் காங்கிரஸில் இருந்து விலகினர்.

சசி தரூர் போட்டி?
இந்நிலையில் டெல்லியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் அக்டோபர் 17-ந் தேதி காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் பதவிக்கு நிறுத்துகிறார். இந்நிலையில் அசோக் கெலாட்டை எதிர்த்து மற்றொரு மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications