சிவசேனா எம்.பிக்களிடையே பிளவு- டெல்லியில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நேரில் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் 12 எம்.பி.க்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை டெல்லியில் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான இந்த 12 எம்.பிக்களும் லோக்சபாவில் தனி அணியாக செயல்படவும் முடிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை இழந்தார். இதனையடுத்து பாஜக ஆதரவுடன் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

Shiv Sena 12 MPs meet Maharashtra Chief Minister Eknath Shinde in Delhi

சிவசேனாவின் 55 எம்.எல்.ஏக்களில் 40க்கும் மேற்பட்டோர் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கின்றனர். அதேபோல் சிவசேனாவின் உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதே பாணியில் லோக்சபா சிவசேனா எம்.பி.க்களிடையேயும் பிளவு ஏற்பட்டது.

லோக்சபாவில் சிவசேனாவுக்கு 18 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் ஏற்கனவே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். அத்துடன் லோக்சபாவில் தனி அணியாக செயல்படவும் 12 எம்.பிக்களும் முடிவு செய்திருந்தனர். இது தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதமும் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று முகாமிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்ற பின்னர் 2-வது முறையாக ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் பலரையும் ஏக்நாத் ஷிண்டே சந்திக்க உள்ளார்.

டெல்லியில் தங்கி இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவை, சிவசேனாவின் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்களும் இன்று சந்தித்தனர். ஏற்கனவே 12 எம்.பிக்கள் தனித்து செயல்பட தொடங்கியதால் லோக்சபாவுக்கான சிவசேனா குழுவில் பல மாற்றங்களை செயல்படுத்தி இருந்தார் உத்தவ் தாக்கரே. இருந்தபோதும் 12 எம்.பிக்கள் பகிரங்கமாக ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்திருப்பது உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+