ஷூட்டர் தாதி சந்திரோ தோமர் கொரோனாவிற்கு பலி - பிரபலங்கள் ட்விட்டரில் இரங்கல்

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷூட்டர் தாதி சந்திரோ தோமர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 89.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஷூட்டர் தாதி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சந்திரோ தோமர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 89. கடந்த வாரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சந்திரோ தோமர் உத்தரபிரதேச மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார காலம் சிகிச்சை பெற்று வந்த சந்திரோ தோமர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பாட்டைச் சேர்ந்த சந்திரோ டோமர் தனது 65 வயதில் போட்டிகளில் பங்கேற்றார். 1998ஆம் ஆண்டில் ஒரு நாள் துப்பாக்கியில் தனது பேத்திக்கு குண்டுகளை நிரப்ப உதவியிருக்கிறார் பாட்டி சந்திரோ தோமர். அதன் பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிபெற வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் தலைதூக்கியது. இதுவரை 30 க்கும் மேற்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். கிராமத்திலும் இளம் வயதுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளித்துவந்தார்.

Shooter Dadi Chandro Tomar dies at 89 due to COVID-19

இவர்களது வாழ்க்கை 2019 ஆம் ஆண்டு பாலிவுட் படமான "சாண்ட் கி ஆங்" படமாக வெளியாகியுள்ளது இதில் தப்ஸி பன்னு மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மூத்த துப்பாக்கி சுடும் வீரங்கனைக்கு பலரும் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தாதி கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்த போது விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் ட்விட்டரில் வாழ்த்தினர். வயது முதிர்வு காரணமாக கொரோனா நோய்க்கு பலியாகி விட்டார் இந்த தைரியமான தாதி.

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "திருமதி. சந்திரா தோமர் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளின் சாம்பியன் திருமதி. சந்திரோ டோமர், அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர்களால் 'ஷூட்டர் டாடி' என்று அழைக்கப்படுகிறார். அவரது ஒரு தைரியம் இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்க்கு இன்று நாடு முழுவதும் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மூத்த பத்திரிகையாளர் ரோஹித் சர்தானா மற்றும் பீகார் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் ஆகியோரை இழந்துள்ளனர். பிரபல திரைப்பட இயக்குநர் கே வி ஆனந்த் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+