ராகுல் காந்தியை இன்று நேரில் சந்தித்தார் சித்தராமையா.. அடுத்த மூவ்?.. கர்நாடகாவில் நீளும் இழுபறி
டெல்லி: கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் தேர்வு குறித்து தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் சித்தராமையா.
கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி மாஸ் காட்டியது. ஆனால் அதன் பின்னர்தான் முக்கிய பிரச்னையே தலை தூக்கியது. அதாவது மாநிலத்தின் முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதுதான் இந்த புதிய குழப்பம். கட்சி பலவீனமாக இருந்த காலத்தில் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் அதன் மாநில தலைவர் டி.கே.சிவகுமார். மட்டுமல்லாது இவர் சார்ந்து இருக்கும் ஒக்கலிகர் சமூகத்தினரின் ஓட்டுக்களும் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமாக கிடைத்திருந்தது.

வழக்கமாக இந்த சமூகத்தினரின் வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்குதான் செல்லும். இதனை காங்கிரஸ் பக்கம் மடைமாற்றி விட்டதில் சிவகுமாரின் பங்கு அளப்பரியது. அதேபோல அரசியலிலும் இவர் சீனியர்தான். எனவே இந்த விஷயங்களை சொல்லி தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மறுபுறம் சித்தராமையா அரசியலில் சூப்பர் சீனியர். ஏறத்தாழ 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மட்டுமல்லாது தனக்கு வயது 75 ஆகிறது. இனி நான் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அரசியலில் அதிகார பயணத்தை நான் இறுதி கட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டேன்.எனவே இந்த ஒருமுறை எனக்கு முதலமைச்சர் பதவியை கொடுங்கள் என்று கோரியுள்ளார்.
இது தவிர காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களில் அதிகமானோர் இவருக்குதான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் என்ன செய்வதென்று கட்சி மேலிடம் குழம்பி வருகிறது. முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சி தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவுக்குதான் என்று ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், கார்கே மாநில தலைவர் சிவகுமாரையும், சித்தராமையாவையும் டெல்லிக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சித்தராமையா நேரில் சென்று சந்தித்திருக்கிறார். உடன் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இருந்துள்ளனர். இதன் பின்னர் டி.கே.சிவகுமாரும் ராகுல் காந்தியை தனியாக சந்தித்து பேசுகிறார்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications