2008 முதல்.. மியான்மர், பாகிஸ்தானை குலைநடுங்க செய்த இந்தியாவின் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு நமது நாடு எப்போது பதிலடி தரும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்த பயங்கரவாதிகளுக்கும் அவர்களை ஏவிட்ட கொலைகார பாகிஸ்தானுக்கும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்' மூலம் தேசம் எப்போது பாடம் கற்றுத் தரப் போகிறது என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது நமது நாடு மீது கோழைத்தனமாக புறவாசலில் ஊடுருவி, காட்டுமிராண்டித்தனமாக கொடூர கொலைகளை அரங்கேற்றும் ரத்தவெறி ஓநாய்களுக்கு சரியான பாடம் கற்பிப்பதும் அவர்களை இல்லாது அழித்தொழிப்பதும்தான். நமது நாட்டின் ராணுவ நடவடிக்கைகளில் ஒரு அங்கமாகவே சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

india pakistan

காங்கிரஸ் ஐமுகூ ஆட்சியில்..

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2008-ம் ஆண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கை தொடங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை மொத்தம் 6 சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைகள், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் ராணுவத்தால் சர்ஜிகல் ஸ்டிரைக் மேற்கொள்ளப்பட்டன. 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னரும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல்

2015-ம் ஆண்டு மணிப்பூரில் ராணுவத்தினரை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மியான்மரில் பதுங்கி இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஊரி தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம்

2016-ம் ஆண்டு காஷ்மீர் பகுதியின் ஊரி செக்டாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து நமது ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக்

2016-ம் ஆண்டு அக்டோபரிலும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் துணையுடன் யுத்த நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது

பாலகோட் சர்ஜிகல் ஸ்டிரைக்

2019-ம் ஆண்டு பாலகோட் சர்ஜிகல் ஸ்டிரைக். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூர்க்கமான தாக்குதலை நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமையகமாக இருந்த பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப் படையினர் சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கை மேற்கொண்டனர். மிராஜ் 2000 போர் விமானங்கள் இந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்தின. இதில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+