டார்கெட் சிந்து.. மாறப்போகும் எல்லை.. தூக்கத்தை தொலைக்கும் பாகிஸ்தான்.. ராஜ்நாத் சிங் அதிரடி
டெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து ஆகியவற்றால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லையில் மாற்றம் வரலாம். சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவரின் இந்தக்கருத்து பாகிஸ்தானுக்கு பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜகவினர் கூறி வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா பல அதிரடி முடிவுகளை எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கும்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சிந்து -இந்தியா
மறுபக்கம் இந்தியா - பாகிஸ்தான் இடையே முக்கியத்துவம் வாய்ந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 1960 ஆம்அண்டு சிந்து நதி நர் ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது அது ரத்து செய்யப்பட்டிருப்பதால் பாகிஸ்தானுக்கு அதிக இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் ராஜ்நாத் சிங் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு பாகிஸ்தானுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சிந்தி இந்துக்கள் குறித்து அத்வானி தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு சிந்த் மண்டலம் பாகிஸ்தானுக்கு சென்றது. இதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு சிந்து புனித அடையாளமாக உள்ளது.
எல்லைகள் மாறலாம்
சிந்து தற்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கலச்சார ரீதியாகவும், நாகரீக ரீதியாகவும் சிந்து எப்போதுமே இந்தியாவின் ஒரு அங்கம் தான். 1,000 வருடங்களுக்கு முன்பிருந்த முக்கியத்துவம் இப்போதும் தொடர்கிறது. நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நாளையே சிந்து மீண்டும் இந்தியா திரும்பவும் வாய்ப்புள்ளது.
சிந்து நதியை புனிதமாக கருதும் மக்கள் எப்போதும் நம்மவர்களாக தான் இருப்பார்கள். எங்கிருந்தாலும் அவர்கள் நம்மவர்களாக மட்டும் தான் இருப்பார்கள்." என்று கூறியுள்ளார். ராஜ்நாத்தின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி சிந்து இல்லாமல் இந்தியா பூர்த்தி அடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications