மத்திய அரசின் கனவை நினைவாக்க வரும் சிங்கிள் டோஸ் ஜான்சன் வேக்சின்.. அவரசக்கால பயன்பாட்டிற்கு அனுமதி
டெல்லி: கொரோனா தடுப்பூசி பணிகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படும் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு, இந்தியாவில் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தான். வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூட வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.

கொரோனா பாதிப்பு
இது புதியதொரு வைரஸ் என்பதால் எந்த நாட்டினாலும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை கொரோனாவால் அதிகப்படியான மக்களை உலக வல்லரசான அமெரிக்காவே இழந்துள்ளது. அதேபோல கொரோனாவை வெற்றிகரமாக கட்டுத்தடுத்தியதாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும்கூட, சில காலத்திற்குப் பிறகு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைப் பார்க்க முடிந்தது.

இந்தியா
உலகெங்கிலும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் தொடங்கிய கொரோனா முதல் அலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 10 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது அலை பல நாடுகளில் உருவான நேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என அதில் உலக நாடுகள் கவனம் செலுத்தின.

கொரோனா வேக்சின்
முக்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் சோதனை இல்லாமல் நேரடியாக அவசரக்கால அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், ஜான்சன் & ஜான்சன் அவரசக்கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில், "ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 5 கொரோனா வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வேக்சின்கள்
இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்ட வேக்சின் பணிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் வேக்சின் பணிகளை மேற்கொள்ள இதுவரை கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேவைக்கு ஏற்ற வகையில் வேக்சின் உற்பத்தி இல்லை. இதனால் பல இடங்களில் கொரோனா வேக்சின் பற்றாக்குறை நிலவுகிறது.

Array
அதிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வேக்சின் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மேலும் பல வேக்சின்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு
சர்வதேச அளவில் ஜான்சன் & ஜான்சன் வேக்சின் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், மற்ற வேக்சின்களை போல இல்லாமல், இது ஒற்றை டோஸ் வேக்சின் ஆகும். அதாவது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளைப் போலக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை இரண்டு முறை கொடுக்க தேவையில்லை. ஒரு டோஸ் வேக்சினை மட்டுமே அளித்தால் போதும். இதன் மூலம் குறைவான வேக்சின்களை கொண்டு, குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் போட முடியும். இதன் மூலம் மத்திய அரசின லட்சியத்தை நிறைவேற்ற ஜான்சன் வேக்சின் மிக பெரியளவில் உதவ வாய்ப்புள்ளது. பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில், ஜான்சன் வேக்சின் தீவிர கொரோனா பாதிப்புகளை 83%, மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதை 93% வரையிலும் குறைப்பது தெரிய வந்துள்ளது.

பயோலாஜிக்கல் இ
இது தொடர்பாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய மக்களுக்கு பயோலாஜிக்கல் இ நிறுவனத்துடன் இணைந்து கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி. எங்கள் வேக்சின்களை பயோலாஜிக்கல் இ நிறுவனம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும். பல்வேறு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட வேக்சின் சோதனை தரவுகளை எங்கள் விண்ணப்பத்தில் இணைத்துள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

விரைவில் இறக்குமதி
விரைவில் இறக்குமதியைத் தொடங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் முதல் வேக்சின் என்ற சிறப்பை பெறவும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா வேக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது நிலவும் சில சிக்கல்கள் காரணமாக மாடர்னா வேக்சின் இன்னும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியம்
சர்வதேச அளவில் ஜான்சன் & ஜான்சன் வேக்சின் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், மற்ற வேக்சின்களை போல இல்லாமல், இது ஒற்றை டோஸ் வேக்சின் ஆகும். அதாவது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளைப் போலக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனை இரண்டு முறை கொடுக்க தேவையில்லை. ஒரு டோஸ் வேக்சினை மட்டுமே அளித்தால் போதும். இதன் மூலம் குறைவான வேக்சின்களை கொண்டு, குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் போட முடியும். இதன் மூலம் மத்திய அரசின லட்சியத்தை நிறைவேற்ற ஜான்சன் வேக்சின் மிக் பெரியளவில் உதவ வாய்ப்புள்ளது. பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில், ஜான்சன் வேக்சின் தீவிர கொரோனா பாதிப்புகளை 83%, மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதை 93% வரையிலும் குறைப்பது தெரிய வந்துள்ளது.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications