எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11 வரை அவகாசம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை காலம் அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நவம்பர் 4ஆம் தேதி முதல் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலகர்கள் (பிஎல்ஓ) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி நிலை முகவர்களாக 2.46 லட்சம் பேர் களத்தில் இருக்கின்றனர். முதல் நாளில் இருந்து எஸ்ஐஆர் படிவங்கள் வீடு வீடாக சென்று அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அதனை பூர்த்தி செய்வதில் பிஎல்ஓ-க்கள் திணறி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட பிஎல்ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்கள் எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியாமல் திணறினர். அதேபோல் எஸ்ஐஆர் பணிகளுக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.
ஆனாலும் திமுகவினர் பிஎல்ஓ-க்களுடன் சென்று படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 98.34 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல் கூடுதல் கால அவசாகம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த நிலையில் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்பின் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும்.
அதில் ஆட்சேபணை இருந்தால் ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஆட்சேபணை குறித்து பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், பின் பிப்ரவரி 14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications