Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR எதிரொலி.. நாடு முழுக்க 1.7 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. குஜராத்தில் தான் அதிகம்! தமிழ்நாடு எங்கே?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஆணையம் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்திலேயே அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது அனைவருக்கும் தெரியும்! அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

SIR voters removal ECI has removed 1 7 crore voters from the record with Gujarat being the most

வாக்காளர்கள் நீக்கம்

இதற்கிடையே தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாகச் சரிந்துள்ளது. எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு நாடு முழுக்க மொத்தமாக 1.70 கோடி வாக்காளர்கள், அதாவது 7.93% வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.

குஜராத்தில் அதிகம்

பெரிய மாநிலங்களில் குஜராத் தான் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இங்கு 13.4% அல்லது 68.12 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் எண்ணிக்கை 5.08 கோடியிலிருந்து 4.40 கோடியாகக் குறைந்துள்ளது. அடுத்து மத்தியப் பிரதேசத்தில் 34.35 லட்சம் (5.96%) வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 5.74 கோடியிலிருந்து 5.39 கோடியாகச் சரிந்தது.

ராஜஸ்தானில் 31.36 லட்சம் வாக்காளர்கள், அதாவது 5.74% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. முன்பு 5.46 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை இப்போது 5.15 கோடியாகக் குறைந்துள்ளது.. சத்தீஸ்கர் மாநிலத்தில் 24.99 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 11.77% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது.. அங்கு வாக்காளர் எண்ணிக்கை 2.12 கோடியிலிருந்து 1.87 கோடியாகக் குறைந்துள்ளது.

எங்கே குறைவு?

மிகக் குறைந்த எண்ணிக்கை என்றால் அது கேரளாவில் தான். கேரளாவில் மிகக் குறைந்த அளவாக இங்கு 8.97 லட்சம், அதாவது 3.22% வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். அங்கு 2.78 கோடியிலிருந்து 2.69 கோடியாக வாக்காளர் எண்ணிக்கைக் குறைந்தது. கோவாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1.27 லட்சம், அதாவது 10.76% பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, அந்தமான் நிகோபார் தீவுகளில் மிக அதிகச் சரிவு, அதாவது 16.87% பேர் நீக்கப்பட்டுள்ளனர். அங்கு 52,364 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3.10 லட்சத்திலிருந்து 2.58 லட்சமாகக் குறைந்துள்ளது. அதேபோல புதுச்சேரியில் 77,367 (7.5%) பெயர்களும், லட்சத்தீவில் மிகக் குறைந்த அளவாக 206 (0.36%) பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்தாண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பீகாரில் இதேபோன்ற சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அந்த டேட்டாவையும் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக நாட்டில் 2.16 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளன. பீகாரில் மட்டும் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.89 கோடியில் இருந்து 7.43 கோடியாகக் குறைந்தது.

தமிழ்நாடு எங்கே

தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. தமிழகத்தின் பட்டியல் நாளை திங்கள்கிழமையும், மேற்கு வங்கத்தின் பட்டியல் அடுத்த வாரம் பல கட்டங்களாகவும், உத்தரப் பிரதேசத்தின் பட்டியல் ஏப்ரல் 6ம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான சட்டச் சிக்கல்கள் இருப்பதால் எஸ்ஐஆருக்கு பதிலாகச் சிறப்புத் திருத்தப் பணியை , தேர்தல் ஆணையம் நடத்தியது. இதன் இறுதி வாக்காளர் பட்டியலில் 2.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இது முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் கணிசமான வீழ்ச்சியைக் காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+