“ஆன்டி இந்தியன்”.. ராகுல் காந்தி பேசியவுடன் கத்திய ஸ்மிருதி இரானி! மோசமான பேச்சு என கண்டிப்பு
டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி உரையாற்றவுடன், எழுந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காங்கிரஸ் எம்பிக்களை பார்த்து, காங்கிரஸ் இந்தியாவே இல்லை என்று தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2 வது நாள் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். தொடக்கத்தில் மிகவும் சாந்தமாக பேச்சை தொடங்கிய அவர், மணிப்பூர் பற்றி பேசத் தொடங்கியதும் அனல் பறந்தது.

"மணிப்பூரில் பாரத மாதாவை கொலை செய்துவிட்டீர்கள். இந்தியாவையே கொலை செய்துவிட்டீர்கள். நீங்கள் தேச துரோகிகள்." என்று அவர் பேசியபோது பாஜக எம்பிக்கள் கொந்தளித்தனர். ராகுலின் பேச்சை கேட்டவுடன் மோடி மோடி என்று அவர்கள் முழக்கமிட, பதிலுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ராகுல் ராகுல், இந்தியா இந்தியா என்று முழக்கமிட்டனர்.
அவர் பேச்சை நிறைவு செய்தவுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து பேசத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்தே ராகுல் காந்தி ஆற்றிய உரையை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். "நாம் இங்கு மிகவும் மோசமான ஒரு பேச்சை கேட்டு இருக்கிறோம். iஇதுபோன்ற மோசமான உரையை நான் கேட்டது இல்லை. நான் அதை கண்டிக்கிறேன்.
இந்தியாவுக்கு ஊழலை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் கட்சிதான். நீங்கள் இந்தியாவே கிடையாது. பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் என்று ராகுல் காந்தி கூறியதை ஆமோதித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையை தட்டினார்கள். ஊழல் பற்றி பேசும்போது உங்களுடைய கூட்டணி இருக்கும் திமுகவை சற்று பாருங்கள்.

இந்தியா வாரிசை நம்பவில்லை. தகுதியை நம்புகிறது. உங்களை போன்றவர்கள் ஆங்கிலேயர்களிடம் என்ன சொன்னீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள் என்றீர்கள். ஊழல் இந்தியாவிலிருந்து வெளியேறு.. வாரிசு இந்தியாவில் இருந்து வெளியேறு. தகுதிக்கு இந்தியாவில் இடம் கிடைத்து உள்ளது.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது? காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நியாயம் எப்போது கிடைக்கும்? சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது மிகப்பெரிய கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டன. காஷ்மீரில் அமலில் இருந்த 370 சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக அங்குள்ள பெண்கள் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications