சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்
டெல்லி: சமூக ஆர்வலரும் ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவருமான சுவாமி அக்னிவேஷ் (வயது 80) உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.
ஆந்திராவின் ஶ்ரீகாகுளத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர் சுவாமி அக்னிவேஷ். இன்றைய சத்தீஸ்கரில் இருந்த சக்தி மாகாண திவானாக பணியாற்றிய தாத்தாவின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார் அக்னிவேஷ்.
கொல்கத்தா செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பின்னாளில் பணியாற்றிய சப்யாசாச்சி முகர்ஜியிடம் ஜூனியர் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றார்.

1970களில் ஆரிய சமாஜ் அமைப்பின் கொள்கைகளை பின்பற்றி ஆரிய சபா என்ற தனிக்கட்சியை தொடங்கியவர் சுவாமி அக்னிவேஷ். (1875-ல் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்டது ஆரிய சமாஜ். 2004-2014ல் இதன் அகில உலக தலைவராகவும் இருந்தார் சுவாமி அக்னிவேஷ்.).
ஹரியானாவில் 1977-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு 1979ல் அம் மாநில கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் அக்னிவேஷ். நாடு முழுவதும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதில், பெண்சிசு கொலை தடுப்பில் முனைப்புடன் பணியாற்றியவர். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து அக்னிவேஷ் விடுதலை செய்யப்பட்டார்.
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடக்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் கருத்து வேறுபாடுகளால் அன்னா ஹசாரேவிடம் இருந்து விலகினார் அக்னிவேஷ்.
2011-ல் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான தூதராகவும் பணியாற்றினார் சுவாமி அக்னிவேஷ். 2011-ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 நாட்கள் சுவாமி அக்னேஷ் கலந்து கொண்டிருந்தார்.

காவி உடை அணிந்திருந்த ஆன்மீகவாதியாக இருந்தாலும் மதச்சார்பின்மையை வலியுறுத்தியவர். மத்திய பாஜக அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலைக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்டவைகளை கடுமையாக எதிர்த்தார். இதனால் இந்துத்துவா அமைப்பினரால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுவாமி அக்னிவேஷ் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட அவர் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுவாமி அக்னிவேஷ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications