"உலகமே முடங்கும்.." அப்படியே நடக்கும் பாபா வாங்கா கணிப்பு? சூரியனில் ஏற்படப் போகும் பகீர் மாற்றம்
பாபா வாங்காவின் பகீர் கணிப்பு இப்போது ஒன்று உண்மையாகி வருகிறது.
டெல்லி: வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்த பாபா வாங்கா, இந்தாண்டு கணித்தவை ஏற்கனவே நடக்கத் தொடங்கிவிட்டதாக அவரை பின்தொடர்வோர் தெரிவித்துள்ளனர்.
பல்கேரியா நாட்டில் 1911 முதல் 1996ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. 81 வயது வரை வாழ்ந்த இவரைப் பாபா வாங்கா என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.
இவருக்கு 12 வயது இருந்த போது, பெரிய புயலில் மர்மமான முறையில் இவரது பார்வை பறிபோனது. இந்தச் சம்பவத்திற்குப் பின், எதிர்காலத்தைப் பார்க்கும் அரிதான சக்தி அவருக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது.

பாபா வாங்கா
வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன. அதுவும் ஏதோ சிறு கணிப்புகள் ஒன்றும் அப்படியே நடக்கவில்லை.. இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது. இவரது கணிப்புகளில் சுமார் 85% அப்படியே துல்லியமாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 5079ஆம் ஆண்டு வரை இவர் கணிப்புகளைச் செய்துள்ளார். அப்போது உலகம் அழியும் என்பதாலேயே அத்துடன் இவர் கணிப்புகளை நிறுத்தியதாக இவரது பாலோயர்கள் கூறுகின்றனர்.

துல்லியமான கணிப்புகள்
செர்னோபில் அழிவு, இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, 2004 தாய்லாந்து சுனாமி மற்றும் ஒபாமா அமெரிக்கா அதிபர் ஆவது என்று இவரது துல்லியமான கணிப்புகள் நீண்டு கொண்டே செல்கிறது. இப்போது இந்த பட்டியலில் மற்றொன்றும் இணைகிறது.. பாபா வாங்கா 2023இல் சூரிய புயல் ஏற்படும் என்று குறித்துக் கணித்திருந்த நிலையில், அது உண்மையாகி வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் இந்த மெகா சூரிய புயலால் பூமியிலும் பிரச்சினை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சூரிய புயல்
சூரியன் மீது இருந்து வரும் மின்காந்த ஆற்றல் பூமியைப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. அவை பூமியில் உள்ள மின் கட்டமைப்பு மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் உட்பட பல்வேறு அமைப்புகளைப் பாதிக்கும்.. இதுபோன்ற பாதிப்பு நிகழ்வுகள் சோலார் மேக்ஸ்மம் என அழைக்கப்படும். இதுபோன்ற நிகழ்வுகள் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 1859 கேரிங்டன் நிகழ்வு சூரிய புயல் பூமியின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் பேரழிவை ஏற்படுத்தும் என்பதைக் காட்டியுள்ளது. அப்போதுடன் ஒப்பிடுகையில் நமது தொழில்நுட்பம் பல மடங்கு அதிகரித்தே உள்ளது. இதனால் இப்போது அதேபோன்ற சூரிய புயல் ஏற்பட்டால் அதன் பாதிப்புகள் மோசமாகவே இருக்கலாம்.

என்ன பாதிப்பு
2023ஆம் ஆண்டில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் பட்சத்தில், அது உலகெங்கும் மிகப் பெரிய மின்சாரத் தடையை ஏற்படுத்தலாம்.. நமது தகவல் தொடர்பு முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.. போக்குவரத்து அமைப்புகளை முடங்கும்.. இதன் காரணமாக சமூக குழப்பங்களும் நிதி நெருக்கடிகளும் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதில் ஏற்படும் பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் ஆபத்தும் உள்ளது என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வல்லுநர்கள்
இது குறித்து டாக்டர் எரிகா பால்மெரியோ கூறுகையில், "சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் ஒரு காந்த இழை இருக்கிறது.. அது மிகப்பெரிய அளவிலான காந்தப்புலக் கோடுகளைக் கொண்டுள்ளது. அதாவது இது வெடித்து சூரிய புயல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.. இதுபோன்ற சக்தி வாய்ந்த ஸ்ட்ரீமர்கள் இருப்பது அதீத சூரிய செயல்பாட்டின் அறிகுறியாகும்.. இந்த ஸ்ட்ரீமர் வெளியேறினால், இது ஒரு பெரிய அளவிலான கதிர்வீச்சு மற்றும் காந்த ஆற்றலை வெளியிடும்.. இது பூமியிலும் தொலைத் தொடர்புகளைப் பாதிக்கும். இருப்பினும், இது பூமியை நோக்கி வெடித்துச் சிதறுமா என்பது துல்லியமாகத் தெரியவில்லை" என்றார்.

வேறு கணிப்புகள்
இந்தாண்டிற்காக அவர் மேலும் கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். அதாவது 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்று கணித்துள்ளார். இதனால் புவி ஈர்ப்பு விசை மாறி வேறு சில பாதிப்புகளும் ஏற்படும்.. அடுத்து இந்தாண்டு ஒரு முக்கிய நாடு பயோவீபன் சோதனைகளை நடத்தும் என்றும் இதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளார். மேலும், இந்தாண்டு அணுமின் நிலையம் வெடிப்பு காரணமாக ஆசியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆய்வகங்களில் குழந்தைகள்
அடுத்த முக்கிய கணிப்பாக 2023இல் குழந்தைகளின் ஆய்வகங்களில் பிறக்கும் சூழல் உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி ஆய்வகங்களில் பிறக்கும் குழந்தைகளின் தோற்றம் மற்றும் குணாதிசயங்களை நம்மால் மாற்ற முடியும். இது குழந்தை பிறக்கும் நடைமுறைகளையே முற்றிலுமாக மாற்றியமைக்கும். அதேபோல இந்தாண்டு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என்றும் இந்த அந்நிய படையெடுப்பால் பல லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி












Click it and Unblock the Notifications