'மூன்றில்' கண் வைக்கும் பாஜக லீடர்.. அமித்ஷாவிடம் சொன்னது இதைதானா.. அப்படின்னா அதிமுக கூட்டணி?
டெல்லி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். ஏற்கெனவே அதிமுக-பாஜக பஞ்சாயத்தானது உரசலிலிருந்து மோதலாக பரிணாமமடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சந்திப்பின் போது நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக! இக்கட்சி திமுகவிலிருந்து பிரிந்திருந்தாலும், இக்கட்சிக்கென சில தனித்தன்மைகள் இருக்கதான் செய்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் திமுகவை விட அதிமுகவுக்கான வாக்கு வங்கிதான் அதிகம். அப்படி இருக்கும்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியை யார் கைப்பற்றுவதென்கிற போட்டி உருவானது. பின்னர் தற்போது இரட்டை தலைமையா? ஒற்றை தலைமையா? என்கிற போட்டி நிலவி வருகிறது. இப்படி இருக்கையில்தான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் தனக்கான இடத்தை பிடிக்க 'துண்டு' போட்டு காத்திருக்கிறது.
ஆனால் சமீப காலங்களாக அதிமுகவுக்குள் நடக்கும் உட்கட்சி விவகாரங்களின் எழும் சலசலப்பு குரல்களை விட, அதிமுக-பாஜக கூட்டணியிடையே எழும் குரல்கள் சற்று சத்தமாக ஒலித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஈரோடு தேர்தல்தான் பிரதானமாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிடும் என்று கட்சியின் சீனியர்கள் எச்சரித்தனர். ஆனாலும், கட்சி தலைமை அதை குறித்த கவலையில்லாமல் தேர்தலில் நின்றது. ஆனால் ஜெயிக்கவில்லை. 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து பாஜக நிர்வாகிகளே போர்க்கொடியை உயர்த்தினர்.

வரவேற்பு
குறிப்பாக அமர்பிரசாத் ரெட்டி கூறிய வார்த்தைகள் அதிமுகவை அதிருப்தியடைய செய்தது. கூட்டணியில் இருந்துக்கொண்டு இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது கொங்கு பகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லையென்பதைதான் காட்டுகிறது என்று தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். இதனையடுத்து நடந்த சம்பவங்கள் பாஜகவுக்கு பேக் ஃபயர் ஆனதை போல இருந்தன. அதாவது ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் தனது படையினருடன் அதிமுகவில் சேர எடப்பாடி பழனிசாமி அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவ்வளவுதான், பாஜக இந்த விஷயங்களில் பொங்கியெழுந்தது.

கூட்டணி
இது கூட்டணி தர்மத்திற்கு ஆகாத செயல் என அண்ணாமலை தொடங்கி பல்வேறு நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருந்ததுதான் இந்த மோதல் போக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதாவது "கூட்டணி விஷயத்தில் சமரசம் செய்யும் நிலை வந்தால் அந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார். ஆனால் எந்த ப்ளான் இல்லாமல் பேசுபவரல்ல அண்ணாமலை. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கவே பாஜக திட்டமிட்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

'மூன்று'
இது தொடர்பாக அமித்ஷாவுடன் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் தேமுதிக-திமுக உறவு அவ்வளவு சுமூகமாக கிடையாது. எனவே தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், அமமுக, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து மூன்றாவது அணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள பாஜக முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது ஏற்கெனவே தென்சென்னை, வேலூர், ஈரோடு என தங்களுக்கு சாதகமாக உள்ள 10 இடங்களை பாஜக பட்டியலிட்டு வைத்திருக்கிறது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று அண்ணாமலை, அமித்ஷாவுடன் கலந்துரையாடியிருக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கு மட்டுமா?
மேற்குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்காக மட்டும் அண்ணாமலை டெல்லி செல்லவில்லை. மாறாக உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும் அவர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். தமிழிசை சௌந்தரராஜனும், எல்.முருகனும் இருந்தபோது கட்டியில் தேடி தேடி சேர்க்கப்பட்ட ஆட்கள் அண்ணாமலை தலைமையின்போது கலைந்து செல்கிறார்கள் என்று தொடர் புகார்கள் தலைமையின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. டாக்டர் சரவணன் தொடங்கி, காயத்ரி ரகுராம் தற்போது நிர்மல் குமார் வரை பல முக்கிய புள்ளிகளும் கட்சியிலிருந்த விலகியிருக்கிறார்கள். அவர்கள் வெளியிலிருந்து அண்ணாமலைக்கு தொடர்ந்து நெருக்கடியளித்து வருகிறார்கள். எனவே இது தொடர்பான பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அண்ணமாலை அமித்ஷாவை சந்தித்து பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படி இருப்பினும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்ச சீட்களை கைப்பற்றுவதுதான் கட்சி தலைமையின் அஜண்டாவாக இருக்கிறது. எனவே அதற்கேற்றார் போல தலைமை காய்களை நகர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முற்றுப்புள்ளி
அதுமட்டுமல்ல, கடந்த மார்ச் 22ம் தேதி பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா திட்டத்தை துவக்கி வைப்பதற்காக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தமிழகம் வந்திருந்தார்.. ஆனால், இவரை அண்ணாமலை நேரில் சென்று சந்திக்கவில்லை.. வழக்கமாக மேலிட தலைவர்கள் யார் வந்தாலும் நேரில் சென்று வரவேற்கும், மாநில தலைவர், பியூஸ் கோயலை சந்திக்காமல் தவிர்த்தது மிகப்பெரிய சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.. அப்படியானால் அண்ணாமலைக்கும், டெல்லிக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டதா? என்ற சந்தேகங்கள் வட்டமடித்தன.. இப்படிப்பட்ட சூழலில்தான், அமித்ஷாவை, அண்ணாமலை சென்று சந்தித்து பேசியுள்ளார்.. தமிழக விவகாரங்கள் தொடர்பாக மட்டுமல்லாமல், வேறு சில விஷயங்களையும் இவர்கள் பேசியதாக தெரிகிறது.. குறிப்பாக, கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணைப்பொறுப்பாளராக இருக்கும் அண்ணாமலை, கர்நாடகா தேர்தல் குறித்தும், தமிழக அமித்ஷாவிடம் பேசியிருப்பதாக சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும், அமித்ஷாவுடனான இந்த சந்திப்பானது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பல்வேறு விவகாரங்களை முடிவுக்கு கொண்டு வரும் சந்திப்பாகவும் கருதப்படுகிறது..!!
-
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
மூணு தோல்வி அண்ணாமலை பெயரை தவிர்க்கவே போட்டியில்லை.. வாசகர் அங்கமுத்து ஆதங்கம் -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக்












Click it and Unblock the Notifications