ஏகே-47லிருந்து வரும் குண்டு போல பொய் சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளின் மீது மோடி விமர்சனம்!
எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஏகே-47 துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளின் வேகத்திற்கு பொய்களை கூறி வருகின்றனர் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
டெல்லி: எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஏகே-47 துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளின் வேகத்திற்கு பொய்களை கூறி வருகின்றனர் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
இந்தியா ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பரபரப்பாகி உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் தற்போது பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த தேர்தல்கள் குறித்து கட்சியினர் மத்தியில் டெல்லியில் பேசினார்.
[மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!]

கூட்டணி
பிரதமர் மோடி தனது பேச்சில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பாஜகவினர் கவலைப்பட கூடாது. அவர்களால் வெற்றிபெற முடியாது. அவர்களை மக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களை மக்கள் வெறுக்கவே செய்வார்கள். அந்த பிரம்மாண்ட கூட்டணி மக்களுக்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் எதிராக உள்ளது.

ஐந்து மாநிலம்
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகதான் வெற்றிபெறும். ஒரு மாநிலத்திலும் பாஜக தோல்வி அடையாது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தை பார்க்க மக்கள் செல்வதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அங்கு எல்லோரும் காமெடியாக பேசுகிறார்கள். அதை பார்த்து சிரிக்கவே மக்கள் செல்கிறார்கள்.

தவறான புகார்
ரபேல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாற்றி மாற்றி பேசி வருகிறார். தினமும் வெவ்வேறு தொகையை சொல்லி மக்களை குழப்பி வருகிறார். அவரை போலவே மற்ற எதிர்கட்சியினரும் பேசுகிறார்கள். மக்கள் இதை எல்லாம் நம்ப மாட்டார்கள்.

பொய் சொல்கிறார்கள்
எதிர்க்கட்சியினர் எல்லோரும் ஏகே-47 துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளின் வேகத்திற்கு பொய்களை கூறி வருகின்றனர். மக்கள் இதை கவனமாக கையாள வேண்டும். இப்போது உண்மைகளை தெரிந்து கொள்ள நிறைய வாய்ப்புள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications