சோனியா, ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசித்த 3 விஷயங்கள்... பரபரக்கும் தேசிய அரசியல்!
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருடன் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் (பி.கே.) நேற்று நடத்திய ஒன்றரை மணிநேர ஆலோசனைதான் அரசியல் கட்சி தலைவர்களிடையேயான ஹாட் டாபிக். பஞ்சாப், உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்களுக்கு அப்பால் சில முக்கிய விஷயங்கள் தொடர்பாக இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாம்.
Recommended Video
2017 உ.பி. சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்தார் பிரசாந்த் கிஷோர். ஆனால் பி.கே.வின் ஆலோசனைகளை ஏற்று பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தவில்லை. அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் சோனியா குடும்பத்துக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது.
அதன்பின்னர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்கின் வெற்றிக்கு காரணமான சொல்லப்பட்டவர் பிரசாந்த் கிஷோர். இப்போதும் அவருக்கு அறிவிக்கப்படாத ஆலோசகரும் பி.கே.தான். சட்டசபை தேர்தல்களில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் வெற்றிக்கும் வியூகம் வகுத்ததும் பி.கே.தான்.

சரத்பவார்-பி.கே.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை திடீரென பி.கே. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 2முறை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை சரத்பவார் கூட்டியிருந்தார். இருந்த போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் சரத்பவார் கூறியிருந்தார்.

சோனியா குடும்பம்- பி.கே. ஆலோசனை
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லியில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் நேற்று பி.கே ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். பஞ்சாப், உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்கள் தொடர்பாகவே பி.கே. ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

பஞ்சாப் விவகாரமா?
அதுவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்- நவ்ஜோத்சிங் சித்து இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் அமைதிப்பேச்சுகளை நடத்ததான் பி.கே. வந்திருப்பதாகத்தான் நேற்று தகவல்கள் பரவின. ஆனால் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் வெளிவரும் தகவல்கள்தான் அரசியல் களத்தை பெரும் பரபரப்பாக்கி வருகிறது.

லோக்சபா காங். தலைவர் ராகுல்?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லோக்சபாவில் காங்கிரஸ் தலைவராக ராகுல் நியமிக்கப்படுவது தொடர்பாக முதலில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய லோக்சபா காங். குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்படுவார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் ராகுல் லோக்சபா குழு தலைவராவது குறித்து விவாதிக்கப்பட்டதாம்.

சோனியா இன்று ஆலோசனை
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது. சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் லோக்சபா தலைவர் குறித்த முடிவு எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இக்கூட்டத்துக்குப் பின்னர் லோக்சபா குழு காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் வியூகம்
அடுத்ததாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதித்திருக்கின்றனர். ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் முதுபெரும் அரசியல் தலைவரான சரத்பவாரை பாஜக முன்னிறுத்தக் கூடும்; துணை ஜனாதிபதியாக குலாம்நபி ஆசாத்தை பாஜக ஆதரிக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி சரத்பவார், குலாம்நபி ஆசாத்தை பாஜக முன்னிறுத்தினால் காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாகவும் விவாதித்திருக்கிறார்கள்;.

2024 லோக்சபா தேர்தல்
3-வதாக 2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து சற்று விரிவாகவே விவாதித்தனராம். லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் ஒருங்கிணைப்பது எந்த அளவு சாத்தியம்? அதற்கான முன்னெடுப்புகள் எப்படியாக இருக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டுள்ளது. அப்படி எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்படும் நிலையில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதில் உள்ள சாதகங்கள், கள நிலவரங்கள் குறித்தும் ஆலோசித்திருக்கிறார்களாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications